வினாசி நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் அவிநாசி நகர திமுக முன்னாள் அவைத் தலைவரும் அவைத் தலைவரும் ஆகிய ஆசிரியர் அ.ராமசாமி அவர்களின் இல்லத்தில் வரவேற்பளித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 10, 2021

வினாசி நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் அவிநாசி நகர திமுக முன்னாள் அவைத் தலைவரும் அவைத் தலைவரும் ஆகிய ஆசிரியர் அ.ராமசாமி அவர்களின் இல்லத்தில் வரவேற்பளித்தனர்

07.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவினாசி நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் அவிநாசி நகர திமுக முன்னாள் அவைத் தலைவரும் அவைத் தலைவரும் ஆகிய ஆசிரியர் .ராமசாமி அவர்களின் இல்லத்தில் வரவேற்பளித்தனர்.

அனைவரையும் ஆசிரியர் இராமசாமி அவர்களும், அவரது மூத்த மகன் இளமுருகுவும்,  பெயர்த்தி மங்கையர்கரசியும் வரவேற்பு நல்கினார்கள்.

உடன் திருப்பூர் மாவட்ட . தலைவர் வெ.குமாரராசா , அவிநாசி நகரப. செயலாளர் ஆசிரியர் அங்கமுத்து, நகர தலைவர் பொன்னுசாமி, திருப்பூர் .. மாவட்ட செயலாளர் மணிவண்ணன், பெரியார் பற்றாளர்கள் சாய் கண்ணன்,  மதிமுகவைச் சேர்ந்த பெருமாள், நண்பர்கள் இறகுப்பந்து கழக செயலாளர் சையத், பெரியார் பற்றாளர் முத்து சரவணன்  ஆகியோர் வரவேற்பு நல்கினார்கள்.

அமையவிருக்கும் பெரியார் உலகம் சிறப்பாக அமைய ஆதரவு தரும் வகையில் ஆசிரியர் ராமசாமி அவர்கள் ரூபாய் 25 ஆயிரத்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் கரவொலிக்கிடையே  வழங்கினார்கள். மேலும் பெரியார் உலகம் அமைய தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல் தவணையாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கி இருப்பதாகவும் பலத்த கரவொலி கிடையே அறிவிப்பு செய்தார்கள்.

 அவரைத் தொடர்ந்து ஆசிரியர் அங்கமுத்து அவர்கள் தனது பங்களிப்பாக ரூபாய் ஆயிரம் ரூபாயை தோழர்களின் கரவொலிக்கிடையே வழங்கினார்கள்.

 மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடும் விதத்தில் இரண்டு விடுதலை  சந்ததாக்களையும், ஒரு உண்மை சந்தாவையும் ஆசிரியர் ராமசாமி வழங்கினார்கள்.

வந்திருந்த தோழர்கள் இடையே ஆசிரியர் ராமசாமி அவர்கள் தலைமையுரை உரையாற்றினார். பின்னர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  சிறப்புரையாற்ற வரவேற்பு நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

காலை உணவிற்காக நம்பியாம்பாளையம் கிராமத்திற்கு சென்ற போது அவினாசி ஊராட்சி ஒன்றிய முன்னாள்  பெருந்தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான சாந்தி பாபு அவர்களும், அவர்களது கணவர் பாபுசாந்தியும், அவர்களது மகன் கலைநிதியும், கருவலூர் பகுதி திராவிடர் கழகத் தோழர் பிரகாஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்கள்.

இந்நிகழ்வில் கழக துணைத் தலைவருடன் கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு சண்முகம், மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment