ரயில்களில் உணவு சேவைகளை மீண்டும் தொடங்க ரயில்வே முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 20, 2021

ரயில்களில் உணவு சேவைகளை மீண்டும் தொடங்க ரயில்வே முடிவு

புதுடில்லி, நவ.20 நாட்டில் கரோனா தொற்று காரணமாக ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ரயில்வேயானது தனது வழக்கமான சேவைகளை மீண்டும் படிப்படியாக தொடங்கி வருகிறது. கரோனா காலத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது வழக்கமான பெயர்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ரயில்வே வாரியம்இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட்”-க்கு  எழுதிய கடிதத்தில், ரயில் சேவைகளை இயல்பாக்குவதையும், நாடு முழுவதும் நீண்ட தூர ரயில் சேவைகளில், பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் செயல்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, மீண்டும் நீண்ட தூர ரயில் சேவைகளில், பயணிகளுக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. “ரெடி டு ஈட் மீல்ஸ்சேவையும் தொடரும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காலத்தில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுவந்த உணவுசேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்க ரயில்வே முடிவு செய்திருப்பதால், நீண்ட தூர ரயில் பயணம் மேற்கொள்வோர் இனி உணவை தயார் செய்வது பற்றி கவலைப்பட தேவையில்லை.

முல்லைப் பெரியாறு அணை

 நீரியியல் ரீதியாகவும் - நில அதிர்வுகளை தாங்கும் வகையில் உள்ளது

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடில்லி, நவ.20 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஜோ ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜோ ஜோசப் விளக்க மனு தொடர்பாக, தமிழக அரசு சார்பிலான பதில் மனுவை வழக்குரைஞர் டி.குமணன் தாக்கல் செய்துள்ளார். இதில், முல்லைப் பெரியாறு அணை நீரியியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையிலும் வலுவாக உள்ளது என உச்சநீதிமன்ற அளித்த மூன்று தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதற்காக உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாதந்தோறும் வைத்துக் கொள்ளும் அட்டவணை, கேட் ஆப்ரேஷன், அளவு மானி தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் தாக்கல் செய்த நிலை அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,  முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஜோ ஜோசப் தாக்கல் செய்துள்ள மனுவை முடித்து வைக்க வேண்டும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment