ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

· பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்து ஒன்றிய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க சட்ட சபையில் மம்தா தலைமையிலான திர்ணாமுல் காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· நீண்ட காலமாக, இந்துத்துவா சக்திகளுக்கு நம்மைத் தள்ள சுதந்திரம் அளித்து, அவர்கள் சத்தியத்தின் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளனர் என்ற தோற்றத்தைக் கொடுத்துள்ளோம் என ஹிந்துத்வா பற்றி தனது நூலில் குறிப்பிட்டதற்காக வீடு தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· ரஃபேல் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதமர் மோடி தலையிட்டதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ், ரஃபேல் ஒப்பந்தத்தில்  நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணையைக் கோருகிறது.

· நாட்டின் முறைசாரா தொழிலாளர்களில் 70 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என ஒன்றிய அரசின் -ஷ்ராம் இணையம் தகவல்.

தி டெலிகிராப்:

· மக்கள் நலன் சார்ந்த அரசின் முதல் வேலை, பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பது. இலவச சமூக சமையலறைகள் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகு முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையை உருவாக்கி மூன்று வாரங்களுக்குள் தீர்வு காண ஒன்றிய அரசு கூட்டத்தை கூட்டுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment