தமிழர் தலைவர் பிறந்தநாளில் விடுதலை சந்தாக்கள் பரிசளிக்க அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

தமிழர் தலைவர் பிறந்தநாளில் விடுதலை சந்தாக்கள் பரிசளிக்க அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

அரியலூர், நவ.30- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 28.11.2021 ஞாயிறு மாலை 4 மணியளவில் அரியலூரில் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடை பெற்றது.  மண்டல ..செயலாளர் பொன்.செந்தில் குமார் கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் .சிந்தனைச் செல்வன் வரவேற்றார்.மாவட்ட தலைவர் விடுதலை. நீல மேகன், மண்டல தலைவர் இரா. கோவிந்தராஜன், மண்டல செய லாளர் சு.மணி வண்ணன், பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட் டத்திற்கு பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாளை கொள்கைப் பிரச்சாரமாக எப்படி கொண்டாடிடுவதெனவும் விடு தலை சந்தா சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி உரை யாற்றினார். செந்துறை ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: செந்துறை வட் டம் குழுமூர் பொறியாளர் இராமச் சந்திரன் அவர்களின் தந்தை .வீரா சாமி,மகளிரணி தலைவர் இந்திரா காந்தி அவர்களின் தாயார் சரசுவதி அம்மாள், திருமானூர் நாயக்கர் பாளையம் முனைவர் சவுந்தர்ராஜன் அவர்களின் தாயார் அம்மணி அம்மாள் ஆகியோரின் மறைவிற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தந்தைபெரியாரின் முழு நம்பிக் கையைப் பெற்றவரும், பேரறிஞர் அண்ணாவால் திராவிட இயக்கத் தின் திருஞானசம்பந்தன் என்று பாராட்டப்பட்டவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளாம் டிசம்பர் 2 அன்று இனிப்புகள் வழங்கி, கழகக் கொடி யேற்றி சிறப்பாக கொண்டாடுவ தெனவும் டிசம்பர் 11ஆம் தேதியன்று ஆண்டிமடத்தில் கருத்தரங்கம் ஒன்றினை சிறப்பாக நடத்திடவும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழர் தலைவர் பிறந்தநாள் தொடங்கி டிசம்பர் 23 வரை விடுதலை ஏட் டிற்கு பழைய சந்தாக்களைப் புதுப்பித்தும் புதிய சந்தாக்களை சேர்த்து அளிப்பதெனவும் முடிவு செய்யப்படுகிறது.

பங்கேற்றோர்

மாவட்ட துணைத்தலைவர் இரா.திலீபன், மாவட்ட .. செய லாளர்க. கார்த்திக், மாவட்ட தொழி லாளரணி தலைவர் சி.சிவக் கொழுந்து, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செய லாளர் தியாக. முருகன், வடலூர் புலவர் சு.இராவணன், பிரபாகரன், ' முத்தையன், செந்துறை ஒன்றிய மா. சங்கர், அரியலூர் ஒன்றிய செயலா ளர் மு. கோபால கிருட்டிணன், திரு மானூர் ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன், அரியலூர் கு. தங்கராசு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment