பெண்களின் முழுமையான பங்களிப்புடன் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

பெண்களின் முழுமையான பங்களிப்புடன் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்

தந்தை பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" நூல் அறிமுக விழா

மும்பை,நவ.30- மும்பை பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்  நூல் அறிமுக விழா -  28.11.2021 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மும்பை பகுத்தறி வாளர் கழகத்தின் தலைவர் .ரவிச் சந்திரன் வரவேற்றார். மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன் தொடக்கவுரையாற்றி னார். 

மாத்துங்க எல்.கே.வாஜி, மாநகராட்சி தமிழ் பள்ளியின் ஆசிரியர் சுசீலா தலைமையில் தந்தை பெரியார் படத்தை கவிதாயினி புதியமாதவி, புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை எழுத்தாளர் ஆனந்தி, மகாத்மா ஜோதிராவ் புலே படத்தை மகிழ்ச்சி பேரவை வனிதா ஆகியோர் திறந்து வைத்தனர்.

மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் செல்வி சிறப்பு அழைப் பாளராக நிகழ்வில் பங்கேற்று பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் எழுதியபெண் ஏன் அடிமை யானாள்?’ நூலை வெளியிட்டார். அரசி, பாக்கியலட்சுமி, பேரின்ப வள்ளி, பத்மசிறீ, சரஸ்வதி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டார்கள்.

கவிதாயினி புதியமாதவி, மகிழ்ச்சி மகளிர் பேரவையின் வளர் மதி, எழுத்தாளர் ஆனந்தி, வழக் குரைஞர் மஞ்சுளா, மகிழ்ச்சி மகளிர் பேரவை வனிதா, விழித்தெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக சிறப்பு அழைப்பாளர் மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தின் துணைப் பொதுச்செயலாளர் செல்வி, ‘பெண் ஏன் அடிமையா னாள்?’  என்ற தந்தை பெரியார்  நூலின் கருத்துரையை மிகவும் அருமையாக விளக்கமாக எடுத்துக் கூறினார்.

நூலினை பெற்றுக்கொண்டவர் களுக்கு பல்வேறு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் அதிக மாக பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேர்க்கடலை மற்றும் பருத்திப்பால் கொடுக்கப் பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் "பெண் ஏன் அடிமையானாள்?" நூல் வழங்கப் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத் திறப்பு , முன்னிலை , வாழ்த்துரை , சிறப்புரை மற்றும் நன்றியுரை அனைவரும் பெண்களே என்பது குறிப்பிடத் தக்கது .

இறுதியாக மகிழ்ச்சி மகளிர் பேரவையின் முத்துலட்சுமி  நன்றி கூற நிகழ்ச்சி சிறப்பாக முடிவு பெற்றது .

 

No comments:

Post a Comment