இந்திய எல்லைப் பகுதிகளுக்கான புதிய சட்டம்: சீனா நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

இந்திய எல்லைப் பகுதிகளுக்கான புதிய சட்டம்: சீனா நிறைவேற்றம்

பெய்ஜிங், அக். 26- அருணாசலப் பிர தேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே  எல்லை யில் நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை 13 கட்டப் பேச்சுவார்த்தை ராணுவ மட்டத் தில் நடத்தப்பட்டது.

எல்லைப் பகுதிகளை பாதுகாப் பதற்காக சீன அரசாங்கம் நடவடிக் கைகளை எடுக்கும். எல்லைப் பாது காப்பை பலப்படுத்துவதற்காக  அரசு தேவையான நடவடிக்கை களை எடுக்கும். எல்லைப் பகுதி களில் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கிட இந்த சட்டம் வழி செய் யும்அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளில் சுமூக தீர்வு காண இந்த சட்டம் வழி செய்யும்  என்பன போன்ற அம் சங்கள் இடம் பெற்றுள்ளன.

சீனா தனது அண்டை நாடு களில் இந்தியா மற்றும் பூடானிடம் மட்டுமே எல்லை பிரச்சினையை தீர்க்காமல் உள்ளது. ஏனைய 12  அண்டை நாடுகளுடனான எல் லைப் பிரச்சினைகளுக்கு  சீனா தீர்வு கண்டுள்ளது.  இந்தியா - சீனா இடையே உள்ள 3488 கி.மீ தூர  எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பிரச்சினை நிலவுகிறது. அதே போல, பூடான்- - சீனா இடையே 400 கி.மீ தூரம் உள்ள எல்லையில் பிரச்சினை நிலவுகிறது.

No comments:

Post a Comment