குலசேகரப்பட்டினத்தில் இருந்து குறைந்த செலவில் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம்: மயில்சாமி அண்ணாதுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

குலசேகரப்பட்டினத்தில் இருந்து குறைந்த செலவில் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம்: மயில்சாமி அண்ணாதுரை

துபாய், அக். 26- துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் இந்திய அரங்கில் நடைபெற்ற கருத்தரங் கில் கலந்து கொண்ட டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ‘‘குல சேகரபட்டினத்தில் இருந்து குறைந்த செல வில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தலாம்’’ என்று பேசினார்.

துபாய் எக்ஸ்போ 2020 கண் காட்சியில் விண்வெளி வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்ட மைப்பு  (இடென்) சார்பில் இந்திய அரங்கில் கருத்தரங்கம் நடைபெற் றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ  மேனாள் விஞ்ஞானியும், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவரு மான டாக்டர் மயில்சாமி அண்ணா துரையை அமீரக தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார் பில், .எஸ்.பி. மேனேஜ்மென்ட் கன்சல்டன்சியின் தலைவர் ஆடிட் டர் பிரின்ஸ் என்கிற இளவரசன் வரவேற்று பூச்செண்டு கொடுத்து பொன்னாடை அணிவித்தார்.

அதனை தொடர்ந்து வருகை புரிந்த இந்திய துணைத்தூதரக அதிகாரி காளிமுத்துவையும் அவர் வரவேற்றார். பின்னர், தமிழில் காணொலியை திரையில் காட்சிப் படுத்தி டாக்டர் மயில்சாமி அண்ணா துரை பேசியதாவது:-

மிசன் மங்கள்யான் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் எப்படி விண்வெளித்துறை மற்ற துறைக ளுடன் இணைந்துள்ளது என் பதை பார்க்கலாம். நீங்கள் பார்த்த காணொலிகாட்சியில் ஒரு சிறுவன் செய்தித்தாளில் நிலவில் மனிதன் காலடி பதித்த காட்சியை பார்க் கலாம். அதுதான் என்னிடம் ஒரு விதையை விதைத்தது. இன்றைய உலக செயல்பாடுகள் மாறிக் கொண்டு உள்ளது. அரசு கொள் கைகள் மாறிக்கொண்டு இருக்கி றது. இந்திய விண்வெளித்துறை அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு போட்டியாக உள்ளது.

ஒரு காலத்தில் இந்தியா நிலவை அடைய முடியாது என்ற கருத்தை சந்திராயன் பொய்யாக்கியது. மேலும் அதன் தகவல்கள் உலகத் திற்கு புதிய தகவல்களை வழங்கி யது. வெளிநாடுகளுக்காக இந்தியா 300-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது. இந் தியாவிற்கும் தேவையான தொலை தூர மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகளை விண்வெளித்துறை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அடுத்த ராக்கெட் ஏவுதளமாக உரு வெடுத்துள்ளது. இந்த ஏவுதளத்தில் இருந்து குறைந்த செலவில் ராக் கெட்டை விண்ணில் செலுத்த முடியும்.

பி.எஸ்.எல்.வி. செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் செலவில் 3-இல் ஒரு பங்கு மட்டுமே செலவாகும். அதாவது ஒரு செயற் கைக்கோளை விண்ணில் செலுத் தும் செலவில் 3 செயற்கைக் கோள் களை ஏவலாம். இதில் கூடுதலாக திருச்சி, சேலத்திலும் அமைக்கப் படும். எதிர்கால ஏவுதளங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்புகளும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பிளாக் துலீப் நிறுவனத்தின் மேலாண்மை இயக் குனர் எஹியா, பெருமாள் பூக் கடை உரிமையாளர் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமீரகத்தில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அமீரக தமிழ்தொழில்முனைவோர் கூட் டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment