சமூக வலைதளத்தை தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

சமூக வலைதளத்தை தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!

வாசிங்டன், அக். 22- அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார். தனது டிரம்ப் மீடியா& டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில்ட்ரூத் சோஷியல்என்ற வலைதளத்தை டிரம்ப்  தொடங்கியுள்ளார். இந்த சமூக வலைதளத்திற்குட்ரூத் சோஷியல்என பெயரிடப் பட்டுள்ளது.

ட்ரூத் சோஷியல்ஆப் அமெரிக்கா முழுவதும் முதல்காலாண்டில்  வெளியாக வாய்ப்பு உள்ளது என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஆப்பில் ஸ்டோரில்ட்ரூத் சோஷியல்ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுவந்ததால் டிரம்பின் கணக்குகளை சுட்டுரை, முகநூல் நிறுவனங்கள் முடக்கிய நிலையில் சொந்தமாக சமூக வலைதளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

மனிதாபிமான உதவிகளை செய்ய

இந்தியா தயாராக உள்ளது: தலிபான் தகவல்

காபூல், அக். 22- ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆப் கானிஸ்தான் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. அதில் இந்தியாவின் சார்பில் இந்திய  வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜே. பி. சிங்  கலந்து கொண்டார்.

அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்கான இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி ஆவார். இஸ்லாமிய அமீரக தலீபான் தூதுக்குழுவின் துணைப் பிரதமர், மவுல்வி அப்துல் சலாம் ஹனபி தலைமையில் ஒரு உயர்மட்ட  தூதுக்குழு அவரை சந்தித்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் அதற்கான வாக்குறுதியை இந்தியா அளித்துள்ளது என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர்  சபிஹுல்லா முஜாஹித் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கஷ்ட மான சூழ்நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என மாஸ்கோ பேச்சவார்த்தையில் கலந்து கொண்ட இந்திய தூதர் ஜே பி சிங் தெரிவித்தார். இருதரப்பினரும் ஒரு வருக்கொருவர் அரசியல் மற்றும் பொருளாதார உறவு களை மேம்படுத்த கருதுகின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய தரப்பு, ஆப்கன் மக்களுக்கு விரிவான மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்நிலையில் உள்ளதாக அறிவித்தது  என்று அதில்  முஜாஹித் தெரிவித்தார்.

No comments:

Post a Comment