நமது இலட்சியப் பாதையில், ஆர்.எஸ்.எஸ். புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளைக் களைவதுதான் திராவிடர் கழகத்தின் பணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

நமது இலட்சியப் பாதையில், ஆர்.எஸ்.எஸ். புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளைக் களைவதுதான் திராவிடர் கழகத்தின் பணி!

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு பாதை அமைத்துக்கொடுக்கின்ற

தூசிப் படைதான் நாங்கள் என்று திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் அறிவிப்பு!

திண்டுக்கல், அக். 22 “நீட் தேர்வு ஒழிக்கப் படவேண்டும் ஏன்? எதற்காக?” - கருத்த ரங்கம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நீட் ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?” - பிரச்சாரப் பயணத்தின் மூன் றாம் நாளின் நிகழ்ச்சி திண்டுக்கல்லில், ஜி.எஸ். மீட்டிங் குளுமை அரங்கில், 19.10.2021 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் நிகழ்வுக்குத் தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் பெ.கிருட் டிணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நகர செயலாளர் வழக் குரைஞர் மு.ஆனந்த முனிராசன் நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றி னார். பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், பெரியார் பெருந் தொண்டர் சொ.சுப்பிரமணியம், தேனி மாவட்டத் தலைவர் ரெகுநாகநாதன், மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நட ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செய்லாளர் மதுரை வே.செல் வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங் கினார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச் சருமான .பெரியசாமி நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தார். அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் சாரை சாரையாக அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் வரிசையாக மேடைக்கு வந்து தமிழர் தலைவருக்கும், அமைச்சருக்கும் பய னாடை அணிவித்து மரியாதை செய் தனர்.

அதன்பிறகு புத்தக அறிமுகப் பொறுப் பாளர் உரை தொடங்கியது. முதலில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன்கற்போம் பெரியாரியம்நூலினை அறிமுகம் செய்து பேசினார்.

நூல் பக்கங்கள் எத்தனை? அத்தி யாயங்கள் எத்தனை? அதிலே என் னென்ன தலைப்புகள், ஆசிரியர் எழுதிய மற்ற புத்தகங்களையும், பெரியாரைப் பற்றி மட்டும் எத்தனை புத்தகங்களை எழுதியுள் ளார் என்றும் பட்டியலிட்டு, அதில் இந்தகற்போம் பெரியாரியமும்ஒன்று என்று குறிப்பிட்டார். ஆசிரியரின் புத்தகங்களில் தகவல்கள் கொட்டிக் கிடக்கும், அந்தப் புத்தகங்கள் கருத்துக் களஞ்சியங்களாக இருக்கும் என்பது ஆய் வாளர்கள், பேராசி ரியர்களின் கருத்து என்று கூறி, புத்தகத்தின் உள்ளடக்கத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தினார். பெரியாரின் கொள் கைகளாக அய்ந்து தலைப்புகளைக் குறிப் பிட்டு, அதைத் தனித்தனியாக விவரித்தார்.

அதைத் தொடர்ந்து, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேருஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைஎனும் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

கொள்கை எதிரிகள் ஆதாரமில்லாமல் பெரியாரைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்புகின்ற வேளையில், அவற்றின் வேருக்கே சென்று  அம்பலப்படுத்தியிருக் கின்றார் நூலாசிரியர். ஆரியம் என்பது விவேகத்தால் வெல்லாது. சூழ்ச்சியால் தான் வெல்லும் என்பதை ஆசிரியர் நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள் ளதைச் சுட்டிக் காட்டினார். கேத்தன் குமார் போன்ற புரட்சியாளரை நினைவு படுத்தி, அதுபோன்ற தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன என்று கூறி, அனைவரும் இதை வாங்கிப் பயில வேண்டும் என கூறி தனது ஆய்வுரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயின்ற மாணவர்களுக்குத் தமிழர் தலைவர் சான்றிதழ்கள் வழங்கி னார். அடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரூக் ஆசிரியர் பற்றியும், திராவிடர்  கழகத்தின் பணி களைப் பற்றியும் பேசினார்.

அதைத் தொடர்ந்து மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், பொதுவு டைமை கட்சியைச் சேர்ந்தவருமான தோழர் பாலபாரதி, முற்போக்கு சக்திகள் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டும் என்கின்ற கருத்தை மய்யமாக வைத்துப் பேசினார்.

தி.மு.கழகத்தின் துணைப்பொதுச் செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சருமான .பெரியசாமி தமதுரையில் பணிகள் காரணமாக தான் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, ஆசிரியரின் பணிகளைப் பாராட்டினார். ஒன்றிய அரசைப் பார்த்து, இதென்ன மன்ன ராட்சியா? என்று கேள்வி எழுப்பினார். திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கை யான சமூகநீதி பற்றிய வரலாற்றை விவரித்தார்.

சிறப்புரை ஆற்றிய தமிழர் தலைவர் தமதுரையில்,  நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமைச்சருக்கும், மற்றவர் களுக்கும் பாராட்டைத் தெரிவித்தார்.  அமைச்சர் மற்றும் பாலபாரதி ஆகியோர் எடுத்துக் காட்டிய செய்திகளை நினைவுப் படுத் தினார். திராவிடர் கழகத்தின் பணி என்ன? என்பதை விளக்கி தூசிப்படைகள் என்று அண்ணா சொல் வார். அதுபோல, மற்றவர்கள் வசதியாக வருவதற்கு பாதைகளில் இருக்கும் கண்ணிவெடி களைக் களைவதுதான் திராவிடர் கழகத்தின் பணி என்றார்.

புத்தகங்கள் என்பன நல்ல அறி வாயுதம். அதைப்பயன்படுத்தி, பெரியார் காணவிரும்பிய ஒரு உலகத்தை படைக்க நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கு ஆதாரமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்ட பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகம் அங்குள்ள ஒருவருக்கு ஏற் படுத்திய தாக்கம், “டைம்ஸ் ஆப் இண்டியாநாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டு ரையை படித்துக் காட்டினார்.

இந்தியாவிலேயே சிறந்த முதல மைச்சரில் முதன்மையாகக் இருக்கக் கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ஆட்சி யில் அனைவருக்கும் அனைத்தும் என் கின்ற அளவில் இருக்கிறது. குற்றம் சொல் வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. மேடையிலேயே 100 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. அமைச்சர் தனியாக 50 புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். புத்தக நிலையத் தோழர்கள் மூலம் நூல்கள் 7320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இறுதியாக திண்டுக்கல் மாவட்ட இணைச்செயலாளர் காஞ்சிதுரை நன்றி கூறினார். மாவட்ட, மண்டல பொறுப் பாளர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment