பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களைத் தவிர நேரடி சாட்சிகளை எதிர்பார்க்க முடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களைத் தவிர நேரடி சாட்சிகளை எதிர்பார்க்க முடியாது

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, அக்.27 அறியாமை யையும், தனிமையையும் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துன்புறுத் தலுக்கு ஆளாகும்போது, அவர் களை தவிர, நேரடி சாட்சிகளை எதிர்பார்க்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வீட்டில் தனியாக இருந்த 5ஆம்வகுப்பு மாணவிக்கு கடந்த 2019ஆம்ஆண்டு ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், ரூபன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது என்று கூறி அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப் பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

தண்டனை தவறு

தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் ரூபன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.

அப்போது, ரூபன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரர் ரூபன் வாடகை வாகன டிரைவராக உள்ளார். சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் ரூபன் இல்லை. அவர் பழனியில் இருந்தார். சம்பவத்தை பார்த்ததாக நேரடி சாட்சிகள் யாரும் இல்லை.

பாதிக்கப்பட்ட சிறுமி, தன் சாட்சியத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். சம்பவ இடத்தில் சிறுமியை தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில், மனுதாரருக்கு தண்டனை வழங்கப் பட்டது தவறு என்று வாதிட்டார்.

நேரடி சாட்சி

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சிறுமியின் சாட்சியம் தெளிவாக உள்ளது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குழந்தைகளின் அறியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி குற்ற வாளிகள் செயல்படும் இதுபோன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர் களை தவிர வேறு நேரடி சாட்சிகளை எதிர்பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப் பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் முழுமையாக உள்ளது என்று தீர்ப்பு அளித்தார்.

தள்ளுபடி

மேலும், சிறுமியின் வாக்கு மூலத்தை ஏற்றுக்கொண்ட கோவை நீதிமன்றம், மனுதாரருக்கு தண் டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. அதில் தலையிட தேவை இல்லை. மேல்முறையீட்டு மனுவை தள்ளு படி செய்கிறேன் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment