செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

செய்தியும், சிந்தனையும்....!

பூஜையால் நீர் வருமா?

*          மேட்டூர் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. பொதுப் பணித்துறையினர் காவிரி அணைக்குச் சிறப்புப் பூஜை!

>>           மேட்டூரில் கடந்த காலங்களில் தண்ணீர் வற்றியபோது பூஜைக்குப் பதில் வேறு என்ன செய்தார்களாம்?

ஆம் என்க!'

*           சொந்த உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருப்பதைக் குற்றமாகக் கருதக்கூடாது.

- ஒன்றிய சமூகநீதி அமைச்சர்

>>           ஆகக் கொஞ்சமாக விஷம் குடிக்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபரோ!

*           மோடி 29 ஆம் தேதி வெளிநாடு பயணம்.

>>           ஆரம்பிச்சுட்டாரய்யா, ஆரம்பிச்சுட்டாரய்யா!

வேலிக்கு ஓணான் சாட்சி

*           மதச்சார்பின்மையில் பா... உறுதியாக உள்ளது.

- ஒன்றிய அமைச்சர் முக்தார் அபாஸ்

>>           ஆமாம், அதற்காகத்தான் பாபர் மசூதி இடிப்பு நடந்தது. அங்கு ராமன் கோவில்  கட்டும் வேலையும் அவசர அவசரமாக நடக்கிறது.

No comments:

Post a Comment