எஸ்.அய்.பி., முதலீட்டை சரியாக திட்டமிடுவது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

எஸ்.அய்.பி., முதலீட்டை சரியாக திட்டமிடுவது எப்படி?

மும்பை, அக். 25- ‘மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய எஸ்.அய்.பி., வழியை நாடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இருக் கின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, ‘மியூச்சுவல் பண்டுகள் சிறந்த வழிகளில் ஒன்றாக அமைகின்றன என்றால், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய ஏற்ற வழிகளில் ஒன்றாக எஸ்.அய்.பி., எனக் குறிப்பிடப்படும், ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்அமை கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் பண்டு திட்டங்களில், சீரான இடை வெளியில் குறிப்பிட்ட தொகையை முத லீடு செய்ய எஸ்.அய்.பி., வழி செய்கிறது.

எஸ்.அய்.பி., முறையில் முதலீடு செய் யும் போது, முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் முதலீட்டிற்கான நிதி இலக் காகும். குறுகிய கால நோக்கிலானதா அல்லது நீண்ட கால நோக்கிலானதா என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவதன் மூலம், முதலீட்டிற்கான கால அவகாசத்தை தீர்மானித்துக் கொள்ளலாம். சரியான நிதியை தேர்வு செய்யவும் இது உதவும். அதே போல, முதலீட்டிற்கான தொகையையும் சரி யாக தீர்மானிக்க வேண்டும். குறைந்த பட்சமாக 500 ரூபாய் கூட முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும், குறைந்த தொகையை மட்டும் முதலீடு செய்வது, நிதி இலக்கை அடைய போதுமானதாக இருக்காது.

எஸ்.அய்.பி., முதலீட்டை குறிப் பிட்ட காலத்தில் உயர்த்திக் கொள்வதற் கானடாப் அப்வசதி மூலம், மாதாந்திர தொகையை அதிகமாக்கும் யுக்தியையும் பின்பற்றலாம். இதன் மூலம் நிதி இலக்கை எளிதாக அடையலாம் என்பதோடு, வருமானம் உயர்வதற்கு ஏற்ப முதலீட்டையும் அதிகமாக்கலாம்.

நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது போலவே, ஒவ்வொரு இலக் கிற்கும் ஏற்ப தனித்தனி நிதியில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக குழந் தைகள் கல்வி, ஓய்வு காலம், விடுமுறை பயணம் போன்ற இலக்குகளுக்கு ஏற்ப நிதிகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட ஒவ்வொரு இலக்கிற்காக தொகையை ஒதுக்கீடு செய்ய முடிவதோடு, முதலீடு பரவலாக் கம் சாத்தியமாகவும் இது கைகொடுக்கும்.

ஏற்ற, இறக்கங்களை மீறி, குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், சந்தை சரியும் காலத்தில் அதிக யூனிட் களை வாங்குவது சாத்தியமாகும். எனவே, இலக்குகளை அடையும் போது மட்டுமே முதலீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது, முதலீட்டின் செயல்பாட்டை மறக்காமல் ஆய்வு செய்ய வேண்டும். முதலீடு சரியான பாதையில் செல்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள ஆய்வு உதவும்.

No comments:

Post a Comment