கூட்டாட்சிக்கு எதிராக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 19, 2021

கூட்டாட்சிக்கு எதிராக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதா?

ஒன்றிய பா... அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கண்டனம்

சண்டிகர், அக். 19- மாநிலங்களை ஆலோசிக்காமல் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (Border Security Force - BSF) கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பது, கூட் டாட்சிக்கு எதிரானது என்று பஞ்சாப் துணை முதலமைச் சரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப்பில், கண்ணுக்கு தெரியாத அவசர நிலை போன்ற சூழலை ஏற்படுத்த ஒன்றிய பா... அரசு முயலுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர்

பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய பாகிஸ்தான் எல்லை யோர மாநிலங்களில், 50 கிலோ மீட்டருக்குள், சோதனை, கைது, பறி முதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (பிஎஸ்எஃப்) ஒன்றிய பா... அரசு அதிகாரம் அளித்து உள்ளது. ஏற்கெனவே இந்த அதிகாரம் இருந்தாலும், அதற்கான வரையறை, எல்லைக்கோட்டிலிருந்து 15 கிலோ மீட்டராக இருந்தது. ஆனால், மோடி அரசு அதனை 50 கிலோ மீட்டராக அதிகரித்துள் ளது. இது மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சி; மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  "பன் னாட்டு எல்லைகளில் இயங்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கு வதற்கான ஒன்றிய அரசின் ஒருதலைப்பட்ச முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், இது கூட்டாட்சி மீதான நேரடித் தாக்குதல் ஆகும். இந்த பகுத்தறி வற்ற முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு நான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு பஞ்சாப் முதலமைச்சர் சரண் ஜித் சிங் சன்னி டிவிட் டர் பதிவில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

துணை முதலமைச்சர்

பஞ்சாப் மாநில துணை முதலமைச்சரும், மாநில உள்துறை அமைச்சருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியுள்ளதாவது, "பஞ்சாபில் கண்ணுக்குத் தெரியாத அவசர நிலை போன்ற சூழ்நிலைகள் உருவாக்கப்படு கின்றன, அதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பஞ்சாப் காவல்துறையின் கைகளில் பஞ்சாப் பாது காப்பாக உள்ளது. அதற்கு பதிலாக எல்லைக்கு அப்பால் வரும் மருந்துகள், ஆயு தங்கள் மற்றும் டிரோன்களில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியான பஞ்சாபிகளை தொந்தரவு செய்யக்கூடாது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமையை காவல் துறையே கையாள்வதற்கு விட வேண்டும். எல்லைப் பாதுகாப்புப் படை எல்லையில் மட்டுமே வைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் முடிவால், பாதுகாப்புப்படையினர், எல்லைப்பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்குள் நுழைவார்கள், கிராமங்களை சுற்றி வளைத்து சோதனை களை நடத்துவார்கள் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். பிஎஸ்எப் கிராமங்களுக்குள் நுழைந்தால், தேடுதல் நடத்தினால், வழக்கு களைப் பதிவு செய்தால், அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும். போதைப் பொருள் கடத்தலைப் பொறுத்தவரை, பெரும் பாலான போதைப் பொருள் சரக்குகள் பஞ்சாப்பிற்கு எதிர்திசையில் இருந்து வருகின்றன. அதாவது, டில்லியில் இருந்துதான் வருகின்றன. பன்னாட்டு எல்லையிலிருந்து அல்ல!" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.   

No comments:

Post a Comment