கல்லல் அருகே ஆலம்பட்டு கிராமத்தில் சமூக நீதி விழா - பெரியார் நகர் திறப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 19, 2021

கல்லல் அருகே ஆலம்பட்டு கிராமத்தில் சமூக நீதி விழா - பெரியார் நகர் திறப்பு!

 அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கிராம மக்கள் திரளாக பங்கேற்பு!

காரைக்குடி, அக். 19- சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு ஊரில் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதிதிராவிடர் அய்க்கிய சபை சார்பாக கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடிசமூகநீதி விழாவும், “பெரியார் நகர்பெயர் சூட்டு விழாவும், 1962இல் தொடங்கியபகுத்தறிவுப் படிப்பகம்புணரமைத்துப் புதுப்பித்துக் கட்டப்பட்டதன் திறப்பு விழாவும் மிகச்சிறப்பாக திருவிழாவைப்போல் அக்டோபர் 17 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

எழுத்தாளர் நா.பாலசுப்பிரமணியம் தலைமையிலும், குன்னங்கோட்டை நாடு கிராமசபை தலைவரும், சிவகங்கை மாவட்ட வி.சி.. தலைவருமான சங்கு உதயகுமார், கி.சங்குநாதன், பி.அன்பு தாசன் ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற எஸ்பிஅய் வங்கி மேலாளர் .தமிழ்மாறன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார்.

பெரியார்நகர் திறப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்பெரியார் நகர்பெயர் கல்வெட்டுச் சுவரை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் கே.எஸ்.எம்.மணி முத்துபுத்தர் படத்தை திறந்து வைத் தார். சிவகங்கை மண்டல தலைவர் சாமிதிராவிடமணி”, செம்மொழிச் சிற்பிகள்தொகுப்பு நூலையும், தி.பெரியார் சாக்ரடீசு தொகுத்தபுத்தர் வாழ்க்கை வரலாறு படக்கதைபுத்த கத்தையும் நன்கொடையாக அளித் ததை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப் பன் பகுத்தறிவுப் படிப்பகப் பொறுப் பாளரிடம் வழங்கினார்.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பாராட்டு வாழ்த் துடன் வரப்பெற்ற மடலை சாமி.திரா விடமணி வாசித்தார். இவ்விழாவில் சிவகங்கைத் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் பி.ஆர்.செந்தில்நாதன் (அதிமுக), கல்லல் ஒன்றிய திமுக செயலாளர் நா.நெடுஞ்செழியன், கல்லல் ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட வி.சி.. (தெற்கு) செயலாளர் திருமொழி அன்பழகன், மேனாள் திமுக ஒன்றியச்செயலாளர் கரு.அசோ கன், கல்லல் ஒன்றிய கழக செயலாளர் கொரட்டி பாலு, ஆலம் பட்டு .. தலைவர் கரு.அசோகன், அரசு மருத் துவர் அருள்தாஸ், வி.கருப்பையா (காங் கிரஸ் தலைவர்), ஆதி.சக்திவேல் (இந் திய குடியரசு கட்சி), கரு.குணாளன் (சிபிஅய்) உட்பட கிராமமக்கள் திர ளாக கலந்து கொண்டனர். தொழில திபர் பரமசிவம் நாச்சியப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment