தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு... தமிழ்நாடு அரசின் துறைகளிலும் இப்போதும் இப்படியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு... தமிழ்நாடு அரசின் துறைகளிலும் இப்போதும் இப்படியா?

தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள விளம்பரம் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானதாகும்; உடனே அதைத் திரும்பப் பெற்று, திருத்தி வெளியிடவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தை அப்படியே தருகிறோம், காண்க.

இதில் முதல் வரிசையில் அதாவது மொத்த காலியிடங்கள் 11 என்று தொடங்குவதற்கு அடியில்,

1. இதர (OC & FC) முன்னுரிமை பெற்றவர் - 1, முன் னுரிமை அற்றவர் - 2 என்று போடப்பட்டிருப்பதில், இதர (OC & FC)  என்று போடப்பட்டுள்ளது தவறான தாகும்; இட ஒதுக்கீட்டுக் கொள் கைக்கே எதிரானதாகும்.

OC என்பது Open Competition  என்பதன் சுருக்கம். அதனை Other Communities  இதர வகுப்புகள் என்று போட்டால், அதன்மூலம் இட ஒதுக்கீட்டையே மாற்றிவிடும் ஆபத்து உள்ளே நுழைந்துள்ளது!

Open Competition - திறந்த போட்டி, பொதுப் போட்டி என்பது, அந்த இடங்களுக்கு அனைவருமே அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டியிடும் இடங்கள் அவை. அதில் முன்னேறிய ஜாதியினருடன் S.C., S.T., O.B.C., போன்ற அனைத்துப் பிரிவினருமே போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெறுவர், இடம் பெறுவர்.

ஆனால்,இதர' என்று கூறினால், Other Communities - 31 சதவிகித இடங்கள் அனைத்தும் திறந்த போட்டியினருக்கே என்று பொருள்படும்.

முன்பு இப்படி (எம்.ஜி.ஆர். ஆட்சியில்) O.C.- யை Other Communities என்று சுகாதாரத் துறை அமைச் சராக எச்.வி.ஹண்டே இருந்தபோது வந்த விளம் பரத்தை எதிர்த்து நாம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நம்மிடம் பேசி, ‘‘தவறை திருத்த ஆணையிட்டுள்ளேன்; எனவே, தயவு செய்து நீங்கள் வழக்கைத் திரும்பப் பெறுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.

நாமும் வழக்கைத் திரும்பப் பெற்றோம்; அப்போது அந்த அமைச்சகம் சார்பில், அது -  டைப் செய்ததில் (Typographical errorஷீ) ஏற்பட்ட ஒரு தவறு என்று பொருந்தாத விளக்கம் சொல்லிய நிலையில், பிறகு விளம்பரத்தையே மாற்றினார்கள்.

அதே ஆட்சியில், வி... (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பிலும் அவ்வாறு விளம்பரம் வந்தது. நமது தலையீட்டால், பிறகு திருத்தப்பட்டது.

மீண்டும் அந்த நிலையில், சில துறைகள் இருக் கின்றனபோலும்; உடனே தவறைத் திருத்தி - மீண்டும் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் இந்தத் தவறு இல்லாதபடி தமிழ்நாடு அரசின் பல துறைகளும் கவனமாகச் செயல்படவேண்டியது அவசர, அவசியமாகும்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

13.10.2021

No comments:

Post a Comment