இந்தியா வரும் பன்னாட்டு பயணிகளுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

இந்தியா வரும் பன்னாட்டு பயணிகளுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: ஒன்றிய அரசு

புதுடில்லி, அக்.22  இந்தியா வரும் பன்னாட்டு பயணிகள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

முழுவதுமாக தடுப்பூசி போட் டுக் கொண்ட வெளிநாட்டு பயணி கள் மற்றும் இந்தியாவுடன் பரஸ்பர ஏற்பாடு செய்யப்பட்ட நாடுகளில் இருந்து உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதேபோல்,  விமான நிலை யத்தில் கரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள் ளது. எனினும், கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்தி ருப்பது அவசியம் என வலியுறுத்தப் பட்டுள்ளது. 

அதேவேளையில் பகுதியளவு தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்கள் அல்லது தடுப்பூசி போடாத வர்கள்,  கரோனா பரிசோதனைகள் செய்து மாதிரிகளை வழங்க வேண்டும்.

வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும் என்றும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

அக்டோபர் 25 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் எனவும் மறு அறிவிப்பு வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment