வடகிழக்கு பருவமழை 26இல் தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

வடகிழக்கு பருவமழை 26இல் தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை,அக்.22- இந்திய வானிலை ஆய்வு மய்ய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை 26ஆம் தேதியை ஒட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  வேலூர், திருவண்ணாமலை, கிருஷ் ணகிரி, கள்ளக் குறிச்சி, கரூர், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தேனி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment