அன்று பனாமா பேப்பர் இன்று பண்டோரா பேப்பர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

அன்று பனாமா பேப்பர் இன்று பண்டோரா பேப்பர்

கருப்புப்பணத்தை ஒழிக்கும் லட்சணம்! கடந்த 5 ஆண்டுகளில்

கோடிக்கணக்கான கருப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு பனாமா பேப் பர்ஸ் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகியுள்ளது. பன்னாட்டுப் புலனாய்வு பத்திரிகையாளர் கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள்,  மேனாள் அதிபர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களும் பண் டோரா  பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ளன.

இவ்விவகாரம் பேருருவம் எடுத்ததைத் தொடர்ந்து, பண்டோரா பேப்பர்ஸ் புலனாய்வு விசாரணையைக் கண்காணிக்க பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய கூட்டுக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் விசாரணை அமைப்புகள் நடத்தும் விசாரணையைக் கண்காணிக்கச் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய நேரடி வரிகள் வாரியம், அமலாக் கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பிர திநிதிகள் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர். இந்த குழுவிற்கு ஒன்றிய நேரடி வரிகள் வாரிய  (சி.பி.டி.டி.) தலைவர் தலைமை தாங்குகிறார்.

இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் கூறு கையில், ”உறுதியான விசாரணை நடைபெறு வதற்காக, சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் பற்றிய தகவல்களை வெளிநாட்டு அரசுகளி டம் ஒன்றிய அரசு கேட்டுப் பெறும். வரி ஏய்ப்பில் ஈடுபட்டோரைக் கண்டறியும் விசாரணை குழுவின் ஒரு பகுதியாக இந்திய அரசும் நிச்சயம் இருக்கும்.

செப்டம்பர் 9, 2021 நிலவரப்படி, பனாமா மற்றும் பண்டோரா பேப்பர்ஸ்களில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளில் தோராய மாகக் கணக்கில் வராத ரூ. 20,352 கோடி வரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனஎன தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், அவரது மருமகள் அய்ஸ்வரியா ராய், அதானி சகோதரர்கள் நூறுகோடிக்குமேலான மக்கள் பணத்தை பனாமா நாட்டில் போலி நிறுவனம் துவங்கி அங்கு முதலீடு செய்தனர். இந்த செய்தி வந்து சில நாட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது . தற்போது முந்தைய பனாமா அறிக்கையை விட பலமடங்கு இந்தியப்பணம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் பெயரில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரும் வந்துள்ளது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 கருப்புப்பணத்தை ஒழித்து ஒவ்வொரு அக்கவுண்டிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறியவர், அவருக்கு நெருக்கமானவர் கள் நூற்றுக்கணக்கான கோடிகளை வெளி நாட்டு கொண்டு செல்ல மறைமுகமாகத் துணை போயுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறார்.

No comments:

Post a Comment