விழாக் காலத்தில் கரோனா தொற்று ஆபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

விழாக் காலத்தில் கரோனா தொற்று ஆபத்து!

ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடில்லி,அக்.9- நாடு கரோனா 2ஆவது அலையை முடிவுக்கு கொண்டுவர போராடிக் கொண்டி ருக்கிறது. தற்போது தொற்று பரவல் மருத்துவமனை சேர்க்கை, இறப்புகள் கட்டுக்குள் உள்ளன.

ஒன்றிய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர் வால், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் டில்லியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

கரோனா 2ஆவது அலை இன் னும் ஓயவில்லை. தற்போது பரவல் தட்டையாக உள்ளது. ஆனாலும் தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

தற்போதைய சூழலை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது. தொற்றுநோய் இன்னும் நீடித்துக்கொண்டிருக் கிறது, நாம் கவனமாக இல்லா விட்டால், விரும்பத்தகாத நிலைமை ஏற்பட்டு விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

விழாக் காலத்திலும், திருமண காலத்திலும் தொற்று பரவல் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இந்த மாதத் திலும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் கவனமுடன் இருந்து கொள்ளுங்கள்.

கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்லாதீர்கள். தேவையற்ற பயணங் களை தவிர்த்து விடுங்கள். வீடுகளி லேயே இருங்கள். பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்.

9 மாநிலங்களில் 34 மாவட்டங் களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறது.

மிசோரம், கேரளா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் வாராந்திர பாதிப்பு 5 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

கேரளாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள் ளனர். மற்ற 4 மாநிலங்களில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலானவர்கள் சிகிச்சை பெறுகின் றனர். 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 28 மாவட் டங்களில் வாராந்திர பாதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் உள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 71 சதவீதத்தினர் ஒருடோஸ்தடுப் பூசியாவது செலுத்திக்கொண்டிருக் கிறார்கள். 27 சதவீதம் பேர் 2 ‘டோஸ்தடுப்பூசிகளையும் போட்டுக்கொண் டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் எழுச்சி பெற்றாலும், அதை சந்திக்கிற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் கரோனா நோயாளிகளுக்காக தற்போது நாடு முழுவதும் 8.36 லட்சம் மருத்துவ மனை படுக்கைகளும், அர்ப்பணிக்கப் பட்ட பராமரிப்பு மய்யங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் தனிமைப் படுக்கைகளும் உள்ளன.

4.86 லட்சம் ஆக்சிஜன் வசதியுட னான படுக்கைகள், 1.36 லட்சம் தீவிர சிகிச்சை படுக்கைகள் இருக்கின்றன.

தினந்தோறும் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் புதிய பாதிப்புகள் வந்தாலும், சந்திக்க தயாராக இருக் கிறோம். நாட்டில் தடுப்பூசி கிடைப் பதில் தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment