பதறுகிறார்கள் பார்ப்பனர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

பதறுகிறார்கள் பார்ப்பனர்கள்!

தி.மு.. ஆட்சிக்கு வந்தாலும் வந்தது - அதுவும் சமூக நீதிக்கான சரித்திர நாயகராம் மானமிகு முத்துவேல் கருணாநிதி மு..ஸ்டாலின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தாலும் அமர்ந்தார் - அக்கிரகாரவாசிகளுக்கு அக்குளில் தேள் கொட்டியது போல துடியாய்த் துடிக்கிறார்கள்.

கருணாநிதியை விட ஸ்டாலின்மோர் டேஞ்சர்என்று அடையாளம் காட்டுகிறார்கள். சபாஷ்! இதைவிட சரியான பாராட்டு வேறு எதுவாக இருக்க முடியும்!

கொஞ்சம்தாஜாபண்ணிக் கூடப் பார்த்தார்கள். திமுக நடத்திய ஈரோடு மாநாட்டைத் தொடர்ந்து திருவாளர் குருமூர்த்தி  அய்யர்வாள்தி..விடமிருந்தும், வீரமணியிடமிருந்தும் ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும்என்றுதுக்ளக்கில் தலையங்கம் கூடத் தீட்டினார்.

இதனை வளர விடக்கூடாது என்று உணர்ந்த செயல் தலைவராக இருந்த நமது தளபதி ஸ்டாலின் அவர்கள்எங்கள் பாதையை நிர்ணயிப்பது பெரியார் திடலே!’ என்று ஓங்கி அடித்ததும் - அவ்வளவு தான் ஆத்திரச் சேற்றில் புரண்டு புரண்டு படுக்கிறார்கள். பேனாவில் சாக்கடைத் தண்ணீரை நிரப்பிசிரார்த்தம்செய்கிறார்கள்.

இந்த வாரம் வெளி வந்த துக்ளக் கார்ட்டூனைப் பார்த்தாலே புரியும் - புத்தி பேதலித்துக் கிடக்கிறார்கள் என்பது பார்த்த மாத்திரத்திலே புரியும். (27.10.2021)

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு..வும் - அதன் கூட்டணிக் கட்சிகளும் 90 விழுக்காடு வெற்றி பெற்று, ஒரு புதிய சாதனை சரித்திரம் படைத்துள்ளன.

குறுகிய காலத்தி லேயே தி.மு.. ஆட்சியின் சாதனைகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கிறது. எக் காளம் போடுகிறது!

குழவிக்கல்லை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்ளும் காந்தாரிகள் ஆகி விட்டார்கள் குல்லூகப்பட்டர் வட் டாரத்தினர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு..வும், அதன் அணியும் பெற்ற வெற்றியை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஜீரணமாகாமல் -  கழிப்பறைக்கும் - வீட்டு அறைக்குமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு..வும் - அதன் கூட்டணிக் கட்சிகளும் பெற்றது வெற்றியில்லையாம்.

மாறாக என்னவாம்? அதிகார பலம் - பண பலம் - மாநில தேர்தல் கமிஷனின் பாரபட்சம் - இவற்றின் வெற்றியாம்! அட்டைப்படம் போடுகிறதுதுக்ளக்

அட தலைப்பிரட்டைகளே! 2019 மக்களவைத் தேர்தலில் 39க்கு 38 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.. அணிதானே!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலிலும் ஆளும் ...தி.மு..வை எதிர்த்து 52 விழுக்காடு இடங்களை கைப்பற்றியது தி.மு.. அணிதானே!

கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் தி.மு.. தானே!

அடுக்கடுக்கான, அலை அலையாக தி.மு..வும் - அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிகளை குவித்ததற்கெல்லாம் இதே காரணங்கள்தானா?

இப்பொழுது நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு..  ஆட்சியில் இருப்பது உண்மை.

அதற்கு முன்னதாக மக்களவைத் தேர்தலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்ற போதும் ஆட்சி அதிகார பீடத்தில் இருந்தது தி.மு..வா? பா...விற்கு அடிமைச் சாசனம்  எழுதிக் கொடுத்தது போல் நடந்து கொண்ட ...தி.மு.. தானே ஆட்சியில் இருந்தது.

அந்தக் காலக்கட்டத்திலும் தி.மு.. அணிதானே இமாலய வெற்றிச் சிகரத்தில் நிமிர்ந்து நின்றது - அதற்கு என்ன பதில்?

ஆம், நான் அரசியல் புரோக்கர் தான்என்று வெட்கம் கெட்டுச் சொன்னசோராமசாமியின் பூணூல் உறவுக்காரர்களே, உங்களின் நாணயமான பதில் என்ன?

உள்ளாட்சித் தேர்தலில் 90 விழுக்காடு வெற்றி பெற்ற தி.மு..வை பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு. கி.வீரமணி அவர்கள், தி.மு.. தலைவர்  - முதல் அமைச்சர் - மு..ஸ்டாலின் அவர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துகிறாராம் - அட்டைப் படத்தில் கார்ட்டூன் போடுகிறது துக்ளக் (27.10.2021)

அட அபிஷ்டுகளே, தி.மு.. அணி வெற்றி பெற்றால் அதற்காக மகிழ்ந்து மனம் நிறைந்து வாழ்த்துகளை மலர்க் கொத்தினை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி கொடுக்காமல்  வேறு யார் கொடுப்பார்? - சங்கராச்சாரியாரா கொடுப்பார்?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் - அக்ரகார வாசிகளுக்கோ அல்லும் பகலும்அய்யோ வீரமணி”, “அய்யோ வீரமணிஎன்ற அச்சம்தானா?

அடி வயிறு கலக்கல் தானா? அந்தோ பரிதாபம் - அக்கிரகார கும்பலுக்கு நமது ஆழ்ந்த அனுதாபம்!

 

No comments:

Post a Comment