5ஜி சேவையை நோக்கி தனியார் நிறுவனங்கள் முந்திச் செல்லும் நிலையில் 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். தொடங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

5ஜி சேவையை நோக்கி தனியார் நிறுவனங்கள் முந்திச் செல்லும் நிலையில் 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். தொடங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடில்லி,அக்.12- தனியார் அலைபேசி நிறுவனங்கள் 5ஜி தொழில் நுட்பத்தை நோக்கி முன்னோட்டம் காணும் நிலையில், தற்பொழுதுதான்  ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறு வனம் 4ஜி சேவையை தொடங்கி யுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ் வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்கெனவே 4ஜி சேவையை தொடங்கியுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி சிம் வழங்கி வருகிறது. இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் ஆகும். இந்நிலையில், 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கி யதாகவும், சேவையின் முதல் அழைப்பில் தாம் பேசியதாகவும், ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டம் நிறை வேறத் தொடங்கியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் செயலிழந்து அல்லது செயலி ழக்கப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவை யையடுத்து 5ஜி சேவைக்கான முன்னோட்டங்கள் என்று இருக்கும் நிலையில், இப்போதுதான் 4ஜி சேவையை தொடங்கிவைத்துள்ள தில் மகிழ்ச்சி கொள்கின்றார் பாஜக அமைச்சர். இதன்மூலம் வளர்ச்சி, வளர்ச்சி என்பது தனியாருக்குத்தான் என்பது எளிதில் விளங்கவில்லையா?

No comments:

Post a Comment