நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, அக். 26- தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளுடன் செயல்பட்டு வரும் விடுதி களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நல ஆணை யர் மதுமதி அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

*  பள்ளி மாணவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின் னரே விடுதிக்கு வருவதை யும், விடுதியில் மாணாக் கர்கள் தனிமனித இடை வெளியுடன் தங்கி கல்வி பயில்வதையும் காப்பா ளர், காப்பாளினிகள் உறுதி செய்ய வேண்டும்.

*  மாணாக்கர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை எடுத்து, அதற்குரிய பதி வேடு ஏற்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

* மாணவர்களிடத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமி நாசினிகள் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

*  நீண்ட இடைவெ ளிக்கு பின்னர் மாணவர் கள் நேரடி வகுப்பில் பங்கு பெறுவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுகுவதற்கு தேவை யான நடவடிக்கைகள், நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனு பவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் ஏற் படுத்த வேண்டும். தொலைக் காட்சி ஒளிபரப்பு நிகழ்ச் சிகளை காண உரிய ஆலோ சனைகளை வழங்கி விடுதி சூழல் இனிமையா னதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றப் படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment