அரசியல் நிகழ்வுகள் - திருவிழாவுக்கு தடை பேருந்துகளில் 100 சதவீத இருக்கை-மேலும் பல்வேறு தளர்வுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 24, 2021

அரசியல் நிகழ்வுகள் - திருவிழாவுக்கு தடை பேருந்துகளில் 100 சதவீத இருக்கை-மேலும் பல்வேறு தளர்வுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக். 24- அனைத்து கடை களுக்கான நேரக்கட்டுப்பாட்டை நீக்கியுள்ளமுதலமைச்சர் மு..ஸ்டாலின், 1ஆம்தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத ரசி கர்களை அனுமதிக்கவும் உத்தர விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா பர வலை தொடர்ந்து பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு, ஒவ்வொரு மாத மும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. படிப் படியாக தளர்வுகளும் வழங்கப் பட்டு வருகின்றன.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆலோசனை

தற்போது தளர்வுகளுடன் அம லில் இருந்து வரும் ஊரடங்கு வருகிற 31ஆம்தேதி காலை 6 மணி யுடன் முடிவடைகிறது. எனவே, கரோனா பாதிப்பின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அடுத்தக்கட்டமாக எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்கான கூட் டம் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் சென்னை தலை மைச் செயலகத்தில் நேற்று (23.10.2021) நடைபெற்றது.

தடுப்பு நடவடிக்கை

இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை கண்காணிப்பாளர் சைலேந் திரபாபு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மக்கள் நல்வாழ் வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள் ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆலோசனை மேற் கொண்டார். விழாக் கொண்டாட்டங்கள், பள்ளிகள் திறப்பு, வடகிழக்கு பருவமழை காலம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (23.10.2021) மாலை முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடுப்பூசி செலுத்தும் பணி

தமிழ்நாட்டில், கரோனா நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத் தும் வகையில், வருகிற, 31ஆம்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

விழாக் காலங்களில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப் படுத்த எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் குறித்தும், அண்டை மாநி லங்களில் நோய்த்தொற்று நிலையினை கருத்தில் கொண்டும், தடுப் பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தவும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.

நவம்பர் 15ஆம்தேதி வரை நீட்டிப்பு

கரோனா நோய்த்தொற்று பர வலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடை முறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-11-2021 வரை நீட்டித்து உத்தர விடப்படுகிறது. பண்டிகை காலங் களில், பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்கவும், அத்தியாவ சிய தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டுள்ளன.

அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம் களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளு மாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நேரக்கட்டுப்பாடு தளர்வு

விழாக் காலத்தை முன் னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத் தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டும் செயல்பட விதிக் கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு கள் 24.10.2021 முதல் தளர்த்தப்படு கிறது.

அதேபோன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளை யாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த வும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங் களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், பின்வரும் செயல்பாடு களுக்கு நவம்பர் 1ஆம்தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதா வது, அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக் கப்படும்.

திரையரங்குகள் 100 சதவீதம் ரசிகர்களுடன், நிலையான வழி காட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடை முறைகளை பின்பற்றி நடத்த அனு மதிக்கப்படுகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக் கூடங்களுடன் (பார்கள்) அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக் கூடங்களும், செயல்பட அனுமதிக் கப்படுகிறது.

பேருந்துகளிலும்100 சதவீத இருக்கை

மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, 100 சதவீதம் இருக் கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தேவையான எண்ணிக்கையி லான பணியாளர்கள், கலைஞர் களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அரசியல் நிகழ்வுகள் - திருவிழாவுக்கு தொடர்ந்து தடை

ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

முதல் மற்றும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனை வரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா நோய்த்தொற்று பர வலை தடுக்க உதவிடுமாறும் கேட் டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment