பெரியாரும் - பிள்ளையாரும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 22, 2021

பெரியாரும் - பிள்ளையாரும்!

கேள்வி: உலகம் எங்கும் வியாபித்து இருக்கும் விநாயகர்பற்றி...?

பதில்: உலகத்தை விடுங்கள். எந்தத் தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டனவோ அங்கு .வெ.ரா. சிலைகள் எத்தனை இருக்கிறதோ, அதைவிட ஆயிரம் மடங்கு விநாயகர் சிலைகள் இருக்கின்றன. முச்சந்தியில் இருக்கும் .வெ.ரா. சிலைகளைக் கண்டு கொள்பவர்கள் கிடையாது - ஆனால், நடைபாதைப் பிள்ளையார் சிலைகளுக்குக்கூட பூஜை, தேங்காய் உடைத்தல், நெய் வேத்தியம் என்று ஏராளமான தடபுடல்கள் உண்டு.

('துக்ளக்', 29.9.2021, பக்கம் 9)

அது என்ன விநாயகர் வியாபித்து இருக்கிறார்? அவர் வியாபித்து இருக்கிறாரா- பொம்மையைச் செய்து கொண்டு போய் வைத்தார்களா? அதுவும் பிள்ளையாரைச் செய்வது எல்லோருக்கும் எளிது.

மாட்டுச் சாணியைப் பிடித்து அதில் இரண்டு அருகம்புல்லைச் சொருகினால் பிள்ளையார் - பிள்ளையார் அவ்வளவு சீஃப்!

வல்லபையின் .....குறியில் தும்பிக்கையை வைத்திருக்கும்வல்லபைக் கணபதிகள் உண்டே! ஆபாசம்தானே அவாளின் பக்திப் பாயாசம்!

இந்த வெட்கக்கேட்டில் பேனா பிடிப்பது வேறு!

கருப்புச் சட்டைக்காரர்களாவது பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் உடைத்தார்கள். ஆனால், விநாயகர் பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி நடத்தி, அந்தப் பொம்மைகளைக் குளத்திலும், கிணற்றிலும், ஆற்றிலும், கடலிலும் போட்டு அடித்தும், உதைத்தும், கட்டைகளால் அடித்தும், உடைத்தும் அவமானப் படுத்துகிறார்களே, இது கடவுளை அவமானப்படுத்தும் செயல் இல்லையா?

கடவுளுக்குச் சக்தி உண்டு என்று நினைத்திருந்தால், இவ்வாறு செய்து இருப்பார்களா? பொம்மைதான் என்பது பக்தர்களுக்கு நன்னாவே தெரியுது போங்கோ!

''தமிழ்நாட்டில் 77,450 கோவில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்கள் ஆகும். இவை அகற்றப்பட வேண்டும்.  செய்யாத  மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் வரவேண்டும்'' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டார்களே (14.9.2020). அந்த ஆணையை நிறைவேற்றியிருந்தால், எத்தனைப் பிள்ளையார்கள் தேறுவார்கள்?

சட்ட விரோதமாக, ஒழுக்கக் குறைவாக ஆங்காங்கே விநாயகரை நட்டு வைத்து 'பார்த்தீர்களா, பார்த்தீர்களா? பெரியார் சிலைகளைவிட விநாயகன் சிலைகள் அதிகம்' என்று கூக்குரல் போடுவதற்கு வெட்கப்படவேண்டாமா?

ஆமாம், அந்தப் பெரியார் சிலைகளைக் கண்டு நடுநடுங்குவது ஏன்?

 - மயிலாடன்

குறிப்பு: தந்தை பெரியார் சிலைகள் எல்லாம் முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட்டவை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்!

No comments:

Post a Comment