பள்ளிகள் திறப்பு வரவேற்கத்தக்கதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

பள்ளிகள் திறப்பு வரவேற்கத்தக்கதே!

கரோனா தடுப்பு விதிகளும் மிகவும் முக்கியம்!

 தமிழர் தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்புமுதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிக்கூடம் நவம்பர் ஒன் றாம் தேதிமுதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத் தக்கதே! அதேசமயம் கரோனா தடுப்பு விதிகளும் மிகவும் முக்கியம் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் நவம்பர் (2021) ஒன்றாம் தேதிமுதல் இது வரை மூடப்பட்டிருந்த தமிழ்நாட்டுப் பள்ளிகள் (ஒன்றாம் வகுப்புமுதல் 8 ஆம் வகுப்புவரை) திறக்கப்பட்டு இயங் கும் என்ற முதலமைச்சரின் அறிவுரை ஆணைக்கேற்ப, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று (29.9.2021) அறிவித் திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது!

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி, சக மாணவர்களுடன் வகுப்புகளில் பாடம் படித்து, பல மாதங்கள் ஓடிவிட்ட நிலையில்,  பள்ளி வகுப்புகள் எப்போது திறக்கும் என்ற ஏக்கத்தை இந்த அறிவிப்பு போக்கிவிடும்.

அதேநேரத்தில், கரோனா கொடுந்தொற்று வீச்சு அறவே நீங்கிவிடவில்லை. பெரும் அளவுக்குக் குறைந் திருக்கிறது; அவ்வளவுதான்! அதை கவனத்தில் கொண்டு, கரோனா தடுப்பு விதிமுறைகளை மிகவும் கண்டிப்புடன்  பின்பற்ற மாணவர்களை, ஆசிரியர்களை, பள்ளிகளைக் கண்காணிப்பதுடன், அவர்களும், பள்ளி யில் பணிபுரிவோர் அனைவரும் மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டு கல்வி நீரோடை நாடெல்லாம் மீண்டும் பாய்ந்திட அனைத்துத் தரப்பி னரும் - பெற்றோர் உள்பட தக்க ஒத்துழைப்பைத் தருவது மிகவும் இன்றியமையாததாகும்.

வருமுன்னர் காப்பதுபற்றிய அறிவுரையுடன்,  நோய் எதிர்ப்புச் சக்தியை மாணவர்களிடையே வெகுவாகப் புகுத்தத்தக்க நலவாழ்வு ஏற்பாடுகளை பள்ளிகளிலும் செய்வதும் முக்கியம்! முக்கியம்!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

30.9.2021

No comments:

Post a Comment