சிறந்த தொழில்நுட்பத்தில் திறன்பேசி தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

சிறந்த தொழில்நுட்பத்தில் திறன்பேசி தயாரிப்பு

சென்னை, செப். 27- உலகின் வேகமாக வளர்ந்து வரும் திறன்பேசி பிராண்டான ரியல்மி, உலகளாவிய தர வரிசையில் சிறந்த திறன்பேசி விற்பனையாளராக உருவெ டுத்துள்ளது என்று கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் நடத்திய சமீபத்திய சந்தை ஆய்வுகள் கூறுகிறது.  2021இல் 15 மில்லியன் ஷிப்மெண்ட்டுகள் மற்றும் 135.1 சதவீத வருடாந் திர வளர்ச்சியுடன் ரியல்மி ஆறாவது இடத்தைப் பிடித்து உள்ளது. இந்த தொழில்துறை லேயே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய, இந்த புதிதாக தொடங்கப் பட்ட பிராண்ட் வெறும் மூன்று ஆண்டுகளில் முத் திரை பதித்துள்ளது.

சராசரியாக 29 வயதிற் குட்பட்ட இளம் அணி அறி யப்படாத பல்வேறு சிரமங் களை எதிர்கொண்டுள்ளது. ஆனாலும் உலகெங்கிலும் உள்ள இளம் டிரெண்ட் செட்டர்களுக்கு அற்புதமான தயாரிப்புகளைக் கொண்டு வருவதில் உறுதியுடனும் நம் பிக்கையுடனும் இருந்தது என குறிப்பிட்டு "கடந்த மூன்று ஆண்டுகளில், நாங் கள் ஒரு உண்மையான சிறந்த தொழில்முனைவோரா கவும் செயல்பட்டு வருகி றோம்", என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்கைலி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment