"சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" என்று நமது முதல் அமைச்சருக்கு அடைமொழி தந்த தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 12, 2021

"சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" என்று நமது முதல் அமைச்சருக்கு அடைமொழி தந்த தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

சட்டப் பேரவையில் கா. அண்ணாதுரையின் பதிவு

சென்னை, செப்.12 தமிழ்நாடு சட்டப் பேரவையில் 7.9.2021 அன்று உரையாற்றிய சட்டப் பேரவை உறுப்பினர் பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை அவர்கள் தன் உரையில் பதிவு செய்தாவது:

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே,

நூறாண்டு வரலாறு கண்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 16-ஆவது சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று உரையாற்றுகின்ற ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கி யிருக்கின்ற தங்களுக்கு என்னு டைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன். அதிலும், குறிப் பாக தந்தை பெரியார் காண விரும் பிய சுயமரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதி ஏற்றுள்ளது என்று உறுதியேற்பு ஆளுநர் உரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டி ருக்கின்ற இந்தச் சூழலில் திராவிட சித்தாந்த உணர்வுகளும், தமிழ் இன சிந்தனைகளும் மிக அழுத்த மாக முன் எப்போதும் இல்லாத அள விற்கு எடுத்து வைக்கப்படு கின்ற இந்தக் காலகட்டத்தில் இந்த அவை யில் உறுப்பினராக பணியாற்றுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். திராவிட இயக்கத் தின் மகத்தான தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, இமைப்பொழு தும் நம் நெஞ்சைவிட்டு அகலாத தலைவர் கலைஞர் ஆகியோரின் இலட்சிய உணர்வுகளை நெஞ்சிலே ஏற்று என் உரையைத் தொடங்கு கிறேன்.

ஆசிரியர் தந்த அடைமொழி!

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண் டாடப்படும் என்ற மகத்தான ஓர் அறிவிப்பை நம்முடைய முதல மைச்சர் அவர்கள் நேற்றையதினம் (6.9.2021) அறிவித்தார்கள். அந்த அறிவிப்பை ஏற்று, திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், நம்முடைய முதுபெரும் அரசியல் தலைவருமான ஆசிரியர் அவர்கள் "சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்கிற ஓர் அடைமொழியை நம் முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கி, சமூக நீதியை இந்த அரசு தொடர்ந்து காப்பாற் றும் என்பதை தெளிவுபட எடுத்து வைத்திருக்கிற இந்தச் சூழ்நிலையில் உரையாற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது.

1980 ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட தி.மு.கழகத்தின் இளை ஞரணியில் 1982, 1983-இல் ஒருங் கிணைந்த தஞ்சை  மாவட்டத்தின் இளைஞரணி அமைப்பாளராக இன்றைய நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அன்றைய இளைஞரணி செயலாளர் தளபதி அவர்களால் நியமிக்கப்பட்டேன். பின்னர், 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் நண்பர்  உதயசூரியன் அவர்கள் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதைப் போல, தலைவர் தளபதி அவர் களால் சட்டமன்ற வேட்பாள ராகப் போட்டியிட வாய்ப்பு வழங் கப்பட்டு, நம் நெஞ்சம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களால் பட்டுக்கோட்டை அண்ணாதுரை என தொடங்கி சின்னசேலம் உதயசூரியன் என 108 வேட்பா ளர்களின் முதல் பட்டியலில் இடம் பெற்றோம். அந்தத் தேர் தலில் வெற்றி பெற்று, இரண்டு ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப் பட்டது. மீண்டும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

தொண்டர்கள் உணர்வால் கிடைத்த வெற்றி

1996-இல் நடைபெற்ற தேர்தலில் எனக்குப் பதிலாக வாய்ப்பு மாற்றி தரப்பட்டு, கழகம் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தோழமை கட்சிக்கு தொடர்ந்து வாய்ப்பு தரப்பட்டதால், கழகத்திற்கு போட்டியிடுகின்ற வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது. இந்தத் தேர்தலில் எப்படியும் பட்டுக்கோட்டையில் கழகம் போட்டியிட வேண்டும் என்ற உணர்வு கழகத் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு முன்பு, ஏறத்தாழ ஓராண்டிற்கு முன்பே இந்தக் கருத்து தலைவர் அவர்களிடம் பல கட்டங்களில் எடுத்து வைக்கப்பட்டன. அதே போன்று, தேர்தல் தேதி அறிவிப் பிற்கு முன்பாக, பட்டுக்கோட் டையில் விவசாயிகள் சந்திப்பு என்கிற எழுச்சிமிகுந்த வரவேற்பில் கலந்துகொண்ட இளம் தலைவர் தம்பி உதயாவிடம் தொகுதியின் நிலையை பல்வேறு தரப்பினரும் எடுத்து வைத்தனர். அதனடிப் படையில் இந்தத் தேர்தலில் கழகத் தின் சார்பில் நான் நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்று இந்த அவைக்கு வந்துள்ளேன். கழகத்தைப் பொறுத்தளவில், 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டையில் போட்டியிட்டிருக்கின்றது.

என்னைப் பொறுத்தளவில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கழக வேட் பாளராகப் போட்டியிடு கின்ற வாய்ப்பு எனக்கு வழங்கப் பட்டது.   எனக்கு இது கனவில் நடந்ததைப் போன்ற ஓர் உணர் வைத் தருகிறது. தமிழ்நாடு சட்ட மன்ற வரலாற்றில் இவ்வளவு பெரிய கால இடை வெளியில் வேட்பாளர் வாய்ப்பு தரப்பட்டு, வெற்றி பெற்று வந்தது நானாகத் தான் இருப்பேன் என்று கருது கிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கி என்னை வெற்றி பெற வைத்திருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், தம்பி உதயா அவர்களுக்கும், நான் வெற்றி பெற உழைத்த கழகத் தோழமைக் கட்சி முன்னோடி களுக்கும், பட்டுக்கோட்டை தொகுதி வாக்காளர்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியினைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment