அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான்கள்

காபூல், செப். 4- ஆப்கனில் தலிபான்கள் தலைமை யில் அமையவுள்ள அமைச் சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலிபான் கள் செய்தித் தொடர் பாளர் சபிஹுல்லா இத் தாலி செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில் பயில பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பெண்கள் மருத்துவ மனைகளில் செவிலியரா கவும், காவல்துறையிலும் பணியாற்ற அனுமதிக் கப்படுவார்கள். அமைச்ச ரவையில் உதவியாளராக இருக்க அனுமதிக்கப்படு வர். ஆனால், தலிபான்கள் தலைமையில் அமைய வுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்க ளாகும் வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆப்கானிஸ் தானைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவ தற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங் களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கி றது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கி றதுஎன்று சபிஹுல்லா தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னதாகவே சீனாவின் முக்கிய அமைச்சர்களு டன் தலிபான்கள் ஆலோ சனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கானிஸ் தானுடனான (தலிபான் கள்) நட்புறவுக்குத் தயா ராக இருக்கிறோம் என்று சீனா சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment