பேராசிரியர் முனைவர் பாரூக்கின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

பேராசிரியர் முனைவர் பாரூக்கின்

'கலைஞர் தி கிரேட்' புத்தகத்தினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

சென்னை. செப்.2- பேராசிரியர் முனைவர் பாரூக் எழுதிய,, எமரால்டு பதிப்பகம் பதிப்பித்த 'கலைஞர் தி கிரேட்' புத்தகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, வக்ஃப் போர்டு தலைவர் ஜனாப் அப்துல் ரகுமான் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 28-8-2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் காட்சியகத்தில் 'கலைஞர் தி கிரேட்' புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஆளூர் ஷாநவாஸ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்   ஜனாப் முகம்மது அபு பக்கர், புதுக்கல்லூரி மேனாள் துணை முதல்வர் பேராசிரியர் அகமது மீரான் மற்றும் எமரால்டு பதிப்பகம் உரிமையாளர் - மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நூலாசிரியர் முனைவர் பாரூக் கலைஞ ருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, குறிப்பாக, மெரினா கடற்கரையில் அவருக்கு இடம் வழங்கக் கடந்த அரசு காட்டிய பொறுப்பற்ற தன்மையையும், அதைக் கண்டு தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், கோபத் தையும் தன் எழுத்தின் வழியாகக் கொண்டு வந்ததாக தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தனது தலைமை உரையில், கலைஞர் குறித்து ஆங்கிலத்தில் வந்திருக்கும் மற்றுமொரு சிறந்த புத்தகம் என்று பாராட் டினார். புத்தகம் நெடுகவும் நூலாசிரியருக்கு இருந்த கோபத்தை அங்கீகரித்த ஆசிரியர், அத்தகைய கோபங்கள் மிகவும் அவசியம் என்றார். சமூகத்திலே ஏற்படு கின்ற அநீதி களைக் கண்டு கோபமடைந்த தந்தை பெரியார் அவர்களால் உரு வானதுதான் சுய மரியாதை இயக்கம். எம்.ஜி.ஆர், கலைஞர் என்றுதான் அழைப்பார். ஆனால், அதற்குப் பின்னால் வந்தவர்கள் அப்படியில்லை. அதைக்கண்டு கோபம் கொப் பளித்து, தான் எழுதிய புத்தகத் திற்குகலைஞர் தி கிரேட்என்றே பெயரிட்டுள்ளார். தலைப்பிலேயே சுயமரியாதை கொப்பளிக்கிறது. இந்தக் கோபம் மிக அவசியமானது. நூலாசிரியர் இதுபோன்ற பல ஆங்கில புத்தகங்களைப் படைக்க வேண்டும் என்று ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட ஜனாப்   அப்துல் ரகுமான் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் இருந்த இந்த அறையில் கலைஞர் அவர்களைப் பற்றிய புத்தகம் வெளியிடுவது புத்தகத்துக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் என்றார். இன்றைக்குச் சமூகநீதி பாதுகாவலராகவும் சிறுபான்மை மக்களுக்கு அரணாகவும் விளங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இப்புத்தகத்தை வெளியிடுவது பொருத்தமான ஒன்று  என்றும் குறிப்பிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்  சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் போது இடையில் இந்த நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்கி வந்திருந்து மீண்டும் சட்டமன்றத்திற்குச் சென்றார். அவர் தனது உரையில் புத்தகத் தினுடைய  சிறப்புகளையும், திறம்பட ஆங்கி லத்தில் எழுதப்பட்ட பாங்கினையும் சுட்டிக் காட்டினார். தமிழர் தலைவர் ஆசிரியர்  வெளியிடும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் பெருமையாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி 'ஹைபிரிட்' என்று அழைக் கப்படும் வகையில் தலைமை விருந்தினரும், சிறப்பு அழைப்பாளர்களும் நேரில் கலந்து கொண்டதும், நூற்றுக்கும் மேற்பட்டோர்  இணைய வழியாக நிகழ்ச்சியைக் காணும் வகையில் தனித்தன்மையுடன் விளங்கியது.

ஏராளமான ஆசிரியப் பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டாலும் அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வெளியே இருந்து தங்கள் கைப்பேசி வழியாக நிகழ்ச்சியைக் கண்டது வியப் பளித்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்கள் ஆசிரியர் அவர்களிடம் அளவளாவி ஒளிப் படம் எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சி மூலம் நேரலை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment