நீதி பட்டபாடு; நீதி படும் பாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

நீதி பட்டபாடு; நீதி படும் பாடு!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பசுவை தேசிய விலங்கினமாக அறிவிக்கஅறிவுரை' கூறியுள்ளார்!

அதுமட்டுமா? ஒரு புதுக் கண்டுபிடிப்பை கூறி நாட்டையே அசத்தி விட்டார்!

பசு ஒன்றுதான் உள்ளே இழுக்கும்போதும் பிராண வாயுவை இழுக்கிறதாம்; வெளியே விடும்போதும் பிராண வாயுவை (ஆக்சிஜன்) விடுகிறதாம்!

யாரோ விஞ்ஞானி இவருக்குச் சொன்னாராம்!

நம்பாரத நாடு' எத்தகைய ‘‘புண்ணிய பூமி'' பார்த்தீர்களா? எப்பேர்ப்பட்ட மேதைகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நாம் பெற்றிருக்கிறோம் பார்த்தீர்களா?

வெளிநாட்டு விஞ்ஞானிகள் இதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டாடி, இவரது யோசனைக்காக நோபல் பரிசைத் தரச் சொல்லி இவருக்காக  சிபாரிசு செய்தால் ஆச்சரியம் இல்லை!

நாக்பூரை சொந்த ஊராகக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே என்ற மராத்தி பார்ப்பனர், ஓய்வு பெற்ற நிலையில், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் சென்று, சுமார் ஒரு மணிநேரம்கதைத்திருக்கிறார்' இன்றையதீக்கதிர்' நாளேடு அதுபற்றி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் கட்டுரையை தந்துள்ளோம், படியுங்கள்!

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சென்ற நீதிபதி எஸ்.. பாப்டே.... மோகன் பகவத்தைச் சந்தித்து  ஒரு  மணிநேரம் உரையாடல்....

நாக்பூர், செப்.2 உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.. பாப்டே, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்குச் சென்று, மோகன் பகவத்துடன் சுமார் ஒரு  மணிநேரம் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பயணத்தின்போது, ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தின் நிறுவனரான கேசவ் பலிராம் ஹெட்கேவார் எனப்படும் கே.பி. ஹெட்கேவாரின் இல்லத்தையும் பாப்டே நேரில் பார்வையிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சரத் அரவிந்த்பாப்டே எனப்படும் எஸ்.. பாப்டே ஆவார். 47 ஆவது தலைமை நீதிபதியாக 2019 இல் நியமிக்கப்பட்ட பாப்டேகடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிதான் ஓய்வுபெற்றார்.

இந்நிலையில், பணி ஓய்வுபெற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில்,செவ்வாயன்று (31.8.2021) பிற்பகல் நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ்.  தலைமையகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மாலை 4 மணி முதல் 5 மணிவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் உரையாடியுள்ளார். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனரான கே.பி. ஹெட்கேவாரின் மூதாதையர் வாழ்ந்த இல்லத்திற்கும் பாப்டே நேரில் சென்றுள்ளார்.

மோகன் பகவத் - எஸ்.. பாப்டே சந்திப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.  அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், இப்படி ஒரு சந்திப்பு நடந்ததா? என்றே தங்களுக்குத் தெரியாது என்று ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தின் மூத்தத் தலைவர்கள் மழுப்பியுள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைமையகம் இருக்கும் நாக்பூரின் பாரம்பரியமான வழக்குரைஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர்தான் எஸ்.. பாப்டே. அவரது தாத்தா, அப்பா, மூத்த சகோதரர் உள்பட அனைவருமே புகழ்பெற்ற வழக்குரைஞர்கள். எனினும் இவ்வளவு காலத்தில் பாப்டே ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சென்றதில்லை.

தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாக்பூர் பாஜக தலைவர் ஒருவரின் மகனுக்குச் சொந்தமான விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்தில் பாப்டே பயணம் செய்தது போன்ற ஒளிப்படம் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை டாக்டர் அம்பேத்கரே வழிமொழிந்து இருக்கிறார் என்றும் ஒருமுறை பாப்டே பேசியிருந்தார்.

பாப்டே உச்சநீதிமன்ற தலைமையாக இருந்த 18 மாத காலத்தில்தான் காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு370, ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டது. இதற்கு எதிராக போராடிய டில்லி மாணவர்கள், பெண்கள் மீதுவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதுதொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதும், ஒரு வழக்கில் கூட ஒன்றிய அரசு கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் மாதக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. கரோனா பொதுமுடக்கத்தின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக் கில் இடம்பெயர்ந்ததை உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்தது.வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது, சட்டம் தொடர்பாக ஆராய குழு அமைக்கிறேன் என்ற பெயரில், அந்தக் குழுவில் வேளாண் சட்டங்களின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டனர்.

வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும் போது, ஜனநாயகத்தை அழிப்பதில் உச்சநீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 மேனாள் தலைமை நீதிபதிகளின் (எஸ்.. பாப்டே, ரஞ்சன் கோகோய், தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கேஹர்) பங்கு குறித்தும் தெரியவரும் என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார். இதற்காக பூஷணுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர் பதவியிலிருந்த காலம் யாருக்குப் பொற்காலம் என்பது புரிகிறதல்லவா!

நீதிபதிகளில் எவராது முன்பு எப்போதாவது, ஏதாவது வழக்கில் குஜராத் பழைய வழக்குகளை விசாரித்து நீதி வழங்கியிருந்தால், அவர்கள் பெயரைகொலிஜியம்' பரிந்துரைத்தாலும் அதனை ஏற்காது அவரை விட்டு மற்றவர்களையே நியமிப்பது இப்பொழுதுள்ள முறை என்கின்றனர் பலர், நம்பாதீர்!

என்ன வினோதம் பாருஎவ்வளவு ஜோக்கு பாரு!

என்றுதான் பாட்டுப் பாடவேண்டும்!

No comments:

Post a Comment