"தி ரைசிங் சன்" மாதமிருமுறை ஆங்கில இதழ் வெளியீடு - இணையதளம் துவக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

"தி ரைசிங் சன்" மாதமிருமுறை ஆங்கில இதழ் வெளியீடு - இணையதளம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் அறிமுகம்

சென்னை,செப்.27- தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு..ஸ்டா லின் அவர்கள், நேற்று (26.9.-2021) மாலை 7.00 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுகஅலுவலகத்தில், திக்கெட்டும் பரவிடும் திராவிடஇயக்கக் கொள்கை, இந்தியா வுக்கே வழிகாட்டி தி.மு. .வின் செய்தி, அகிலத் துக்குச் சொல்ல ஆங்கி லத்தில் உலகம் முழுவதும் ஒளி பாய்ச்ச இருக்கும், மாதம் இரு முறை வெளிவரும் 'தி ரைசிங் சன்' (“The Rising Sun” Magazine) இதழின் முதல் பிரதியினை, இவ்விதழின் பதிப்பாளர் மற்றும் வெளி யீட்டாளரும் - திமுக இளை ஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முன் னிலையில் வெளியிட்டார்.

திமுக பொதுச்செயலா ளர் துரைமுருகன்,  பொரு ளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் பத்திரிகை ஆசிரியர் பேரா.கான்ஸ் டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் The Rising Sun Magazine   இதழுக்கான   <www.therisingsunmagazine.com> இணைய தளத் தினை திமுக தலைவர் மு..ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தி.மு.. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான  டி.ஆர்.பாலு, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் - வட சென்னை தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினரு மான டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மேற்கு மாவட்ட பொரு ளாளர் அய்.கென்னடி, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் .சுபேர்கான், மாநில இலக்கிய அணி பொருளாளர் டாக்டர் நா.சந்திரபாபு, சென்னை வடக்கு மாவட்ட வர்த் தகர் அணி அமைப்பாளர் மதிவாணன், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அன்பு துரை ஆகியோர் இவ்வித ழுக்கான ஆயுள் சந்தா வினை திமுக தலைவர் அவர்களிடம் அளித்து, முதல் பிரதியினை பெற் றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment