இன்றைய ஆன்மிகம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 24, 2021

இன்றைய ஆன்மிகம்?

அதேபகவான்'தானே!

கேள்வி: தங்கையான என்னிடம் சகோதரர்கள் அன்புடன் நடக்க யாரை வழிபடலாம்?

பதில்: தங்கை திரவுபதியின் மானம் காத்த பகவான் கிருஷ்ணனை வழிபடுங்கள். கோபாலா.... கோவிந்தா... என்னும் திருநாமத்தை நம்பிக்கையுடன் ஜெபியுங்கள்.

- ‘தினமலர்' ஆன்மிக மலர், 17.9.2021

தங்கையின் மானத்தைக் காக்க ஆடை கொடுத்த அதேபகவான்' கிருஷ்ணன்தானே, குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிக்கொண்டு, மரத்தில் ஏறிக்கொண்டு  பெண்களை கைகளைத் தூக்கியபடி வரச் சொன்னான்.

பசி அடங்குமா?

கேள்வி: குளித்ததும் மானசீகமாகக் கோவிலுக்குச் செல்வதாக நினைத்தால் பலனுண்டா?

பதில்: உண்டு. கரோனா அலை ஒழியும்வரை இதைப் பின்பற்றுவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

- ‘தினமலர்' ஆன்மிக மலர்

கோவிலுக்குப் போகவேண்டாமாம், கோவிலுக்குப் போவதாக மானசீகமாக நினைத்தாலே போதுமாம்.

பசி வரும்போது சாப்பிட வேண்டாம்; சாப்பிட்டதாக மானசீகமாக நினைத்தாலே போதும் - பசி அடங்கிப் போய்விடுமா?

அதென்ன கரோனா காலம் வரை?

கரோனாவால் திருப்பதி ஏழுமலையான் அர்ச்சகரே செத்துப் போனார் என்பது கூடுதல் செய்தி!

No comments:

Post a Comment