ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல்அய்தராபாத்:

·   மோடி அரசு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும், வளமான பொதுத்துறை நிறுவனங்களை விற்கவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

· டில்லியில் நடந்த வன்முறைகள் குறித்த வழக்கில் மாற்றுக் கருத்து கூறுவது என்பது அடிப்படை உரிமை என டில்லி உயர் நீதிமன்றம் கருத்திட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த முடிவு வரும்வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தப்போவதில்லை என மகாராட்டிரா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு.

· ஜாதிவாரி கணக்கெடுப்பு இட ஒதுக்கீடு குறித்த அளவீட்டிற்கு உதவும் என்பதே அதை தடுப்பதற்கான காரணமாக உள்ளது என பிரெஞ்சு அறிஞர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்திட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையில் குழு அமைத்துள்ளார்.

தி இந்து:

· பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் உள்ள பேராசிரியர் நியமனங்களை அக்டோபர் மாதத்திற்குள் நிரப்பிட அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவு.

தி டெலிகிராப்:

· ஆக்சிஜனை உள்ளேயும் வெளியேயும் சுவாசிக்கும் ஒரே விலங்கு பசு என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு.

· யோகி தலைமையிலான .பி. பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் ஹிந்துத்துவாவை நம்பியே தேர்தலை சந்திக்க உள்ளது பாஜக.

· உற்பத்தி நிறுவனங்களில் மட்டுமே, 19 லட்சம் தொழிலாளர்கள் ஆகஸ்டு மாதத்தில் வேலை இழந்துள்ளனர் என இந்திய பொருளாதாரம் குறித்து ஆய்வு மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது..

- குடந்தை கருணா


No comments:

Post a Comment