பெரியார் பாலிடெக்னிக் மாணவரின் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

பெரியார் பாலிடெக்னிக் மாணவரின் சாதனை

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் தனது புதிய கண்டு பிடிப்பிற்காக ரூ.1 லட்சம் பரிசு பெற்றார்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் தொழில் முனைவோர் மேலாண்மை மேம்பாட்டு மய்யத்தின் வாயிலாக தொழில் முனைதல் மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.  இதன் மூலம் தொழில்முனைதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அய்ந்து மண்டலங்களில் தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர் அமைப்பு நடத்திய போட்டிக்கு அனுப்பப்பட்ட 2758 விண்ணப்பங்களில் 497 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 147 குழுக்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற துவக்க முகாமில் தேர்வு செய்யப்பட்டன. 

மேலும் 02.07.2021 மற்றும் 03.07.2021 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 25 குழுக்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன.  வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை மாணவர் பி.ராஜ்குமார் கம்பரஸ்ஸர் இல்லாத குளிர்சாதன இயந்திரம் (Non Compressor Air Conditioner)  என்ற தனது புதிய கண்டுபிடிப்பை தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர் (Tamil Nadu Student Innovators)   அமைப்பு நடத்திய போட்டியில் காணொலிக் காட்சி வாயிலாக செயல்முறை விளக்கம்  அளித்தார்.  இப்போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 44 மாணவர்கள் குழு இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் பி.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்றார்.


No comments:

Post a Comment