எவ்வளவு இழப்பு வந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 22, 2021

எவ்வளவு இழப்பு வந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

சென்னை, ஆக.22 எவ்வளவு இழப்பு வந்தாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப் படாது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரி வித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட வாகைக்குளம், பொதிக்குளம், கணிக்கூர், கொண்டு நல்லான்பட்டி, வல்லக்குளம், பன்னந்தை, மாரந்தை, கிடாத்திருக்கை, இளஞ் செம்பூர், கீழச்சிறுபோது ஆகிய 10 இடங்களில் அனைவருக்கும் நல வாழ்வு திட்டத்தின் கீழ் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட 10 புதிய துணை சுகா தார நிலையங்களை போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தார். ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய தாவது: தமிழ்நாட்டில் தற்போது 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக் கின்றன. அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2000 பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படும். எவ்வளவு இழப்பு வந்தாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.

போக்குவரத்து துறையில் வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் வேலை தயாராகிக் கொண்டிருக் கிறது. பட் ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதலமைச்சரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும். அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் 1,800 காலிப் பணியிடங்கள் உள்ளன. நடத்துநர், ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளது. என்றார்.

No comments:

Post a Comment