ஒலிம்பிக்கில் சாதித்த பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 21, 2021

ஒலிம்பிக்கில் சாதித்த பெண்கள்

பதக்கப்பட்டியலில் முதலிடம் வருவதற் கும் பெண் வீராங்கனைகள் தான் காரணமாக உள்ளனர்

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை அதிகம் வென்ற நாடுகள் அந்த நாட்டின் பெண் வீராங்கனைகளால் தான் இந்த சாதனையை நடத்த முடிந்தது,

 இது தொடர்பாக புள்ளிவிரபங்களோடு ராய்டர் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளது அதன் தமிழாக்கம் வருமாறு:

அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள்  எல்லா விளை யாட்டுகளிலும் பெண்களுக்கான சம வாய்ப்பு கொடுக்கிறது  பெண்கள் அணிக்கு தனிக் கவனம் செலுத்தி அவர்களுக்கு என்று எந்த ஒரு குறைபாடு ஏற்படாமல் இருக்க பெரு நிறுவனங்களோடு அரசுகளே தனித் தனியாக ஒவ்வொரு அணிக்கென்று ஒப்பந்தமிட்டுக்கொள்கிறது, 

 இதுதான் முதல் 10 இடங்களை வென்ற நாடுகளில் பதக்கங்களை அள்ளிய பெண்களின் சாதனைக்கான காரணமாக உள்ளது.  113 பதக்கங்களை வென்ற  அமெரிக்காவுக்கு ,ஆண்கள் அணி  41பதகங்களை வென்றனர். பெண்கள் அணி  66 பதக்கங்கள் வென்று கொடுத்தனர். கலப்பு அணிகளால் 6 பதக்கங்கள் கிடைத்தன.  ஆண்களை விட பெண்கள் 15 பதக்கங்கள் அதிகமாக வென்றனர்.

 சீன நாடு அள்ளிய பதக்கங்களின் எண்ணிக்கை  88, ஆண்கள் 35 வென் றனர். பெண்களோ 47 பதக்கங்களை வென்றுகாட்டினர் . கலப்பு அணிகள் மூலம் 6 பதக்கங்கள் கிடைத்தன.

தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாடுகளுக்கு அதிக பதக்கங்களைவென்றுகொடுத்திருப்பது பெண்கள்தான்.இதற்கு காரணம் இந்த நாடுகள் சார்பாக போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் பெண்கள் அதிகம் இருந்தனர்.

மொத்தம் 615 வீரர்கள் பங்கேற்ற அமெரிக்க  அணியில் 330 பெண்கள். அதேபோல், 406 வீரர்கள் கலந்துகொண்ட சீன அணியில் 281 பேர் பெண்கள் ஆவார்.ரஷ்ய அணியில் 148 ஆண் வீரர்கள் பங்கேற்ற நிலையில் 185 வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இங்கிலாந்து  அணியில்பங்கேற்ற 376 வீரர்கள் 200 வீராங் கனைகள் பங்கேற்றனர், அதே போல், 484 வீரர்கள் பங்கேற்ற ஆஸ்திரேலியக் குழுவில் 259 பெண் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

113 வீரர்கள் பங்கேற்ற நெதர்லாந்து அணியில் இருந்த 165 வீராங்கனைகள் இருந்தனர். .இந்த ஆண்டு ஒலிம்பிக்கில்  முதல் 7 இடங்களைப் பெற்ற நாடுகளில்,  பெண்களே அதிக அளவில் பங்கேற்றிருந்தனர்.பெண் களை புறக்கணிக்கும் நாடுகள் பதக்கத்தை கோட்டை விடுகின்றனர்

ஆணாதிக்கம் மிகுந்த சில ஆசிய நாடுகளில் ஆண் வீரர்களுக்கு  கொடுக்கும் முக்கியத்துவத்தை வீராங்கனைகளைக்குக் கொடுப்பதில்லை .

எடுத்துகாட்டாக வாட்டர் போலோ விளையாட்டில்  ஆண்கள் பிரிவில்  பிரேசில் மற்றும் ஜப்பான்  ஒலிம்பிக் தொடர்களில் செர்பியா தங்கம் வென்றது. லண்டன் ஒலிம் பிக்கில்  குரோஷியா தங்கம்வென்றது. ஆண்கள் பிரிவில் மிகச் சிறந்த அணிகளாக இருந்தாலும், இந்த நாடுகளின் பெண்கள் வாட்டர்போலோ அணிகளை  ஒலிம்பிக் விளையாட அனுப்புவதில் அதன் ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள ஆணாதிக்கவாதிகள் விரும்புவதில்லை.

 இந்த நாடுகளில் சிறந்த பெண்கள் அணி இருந்தாலும் அமெரிக்காவை எதிர்த்து விளையாட திறமையான மற்ற நாட்டு பெண்கள் அணி இல்லாத காரணத்தால் ஒலிம்பிக்தொடர்களிலும் அமெரிக்கா தொடர்ந்து தங்கம் வென்றுவருகிறது.

அமெரிக்க அணி திறமையான வீரங்கனை களை அனுப்பி கூடைப்பந்து  பெண்கள் பிரிவிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது அதுபோக, சாப்ட்பாலில் வெள்ளியும், கால்பந்தில் வெண்கலமும்  அமெரிக்க பெண்கள் அணிக்குக்கிடைத்தன.

அமெரிக்காவின் ஆண்கள் கால்பந்து அணி கடந்த100 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உலகக்கோப்பை காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. 2018 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவேயில்லை. அமெரிக்க பெண்கள் அணியோ பீஜின் ஒலிம்பிக் முதல் தொடர்ந்து  உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

ஜிம்னாஸ்டிக்ஸை எடுத்துக்கொண்டாலும் இதேநிலைதான். கிரீஸ், ஆர்மீனியா போன்ற அணிகள் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஒரேயொரு ஆணைஅனுப்பி ஒரு பதக்கம் வென்றன.அந்தநாடுகள் சார்பில் பெண்கள் வரவே இல்லை. 4ஆண்கள், 1 பெண் சென்ற துருக்கி அணியில், ஆடவர்பிரிவில் 1 வெண்கலம் கிடைத்தது.

 எதிரணியில் திறமை இல்லாத போட்டிக்கு ஆள் இல்லாததை  பயன்படுத்தி சீனா இந்தப்போட்டிகளில்  8 ஆண்களையும், 13 பெண்களையும்அனுப்பியிருந்தது.  அனைவருமே பதக்கங்களோடு நாடு திரும் பினர்.

அமெரிக்கா சார்பில் 6 ஆண்களும் 14 பெண்களும் பங்கேற்றனர். அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகள் பெண்கள் பிரிவில் மற்ற நாடுகள் ஈடுபாடு காட்டாததால் சரியாக அந்த வாய்ப்பை திட்டமிட்டு பயன்படுத்தி   அந்த இடைவெளியை நிரப்பி பதக்கங்களை அள்ளிக் கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் தங்கள் குழுவில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கின் அமெரிக்க குழுவில்பெண்களை விட 24 ஆண்கள் அதிகமாக இருந்தனர்.  2012இல் ஆண்களை விடவும் 8 பெண்கள்அதிகமாகினர் பிரேசில் ஒலிம்பிக்கில்  எட்டு பதினெட்டானது .டோக்கியோவில் அது 45-ஆக அதிகரித்து விட்டது. 2012 ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட சீன அணியில் ஆண்களைவிட  54 பெண் வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

 பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில்  அந்த எண்ணிக்கை 95 ஆனது. அதுவே ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில்  281 என உயர்ந்திருக்கிறது! பெண் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்பதற்கு உலகின் முதல் நிலைப் போட்டிகளான ஒலிம்பிக்கிலேயே வென்று காட்டி எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

மதத்தை கைகழுவிவிட்டு பெண் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாடுகள் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிச்செல்கின்றன

ஆசிய நாடுகளில் மதம் அதன் மூலம் கற்பிக்கப்படும் பெண் அடிமைத்தனம் போன்றவைகளாலும் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக பதக்க வாய்ப்புகளும் இழந்துகொண்டே போகிறது,

No comments:

Post a Comment