நாடாளுமன்ற நடைமுறைகளை நிராகரித்து முடக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

நாடாளுமன்ற நடைமுறைகளை நிராகரித்து முடக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்

ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்! - இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

சென்னை,ஆக.6- இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் மக்கள் நாடாளு மன்றக் கூட்டம் நடத்துவது என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் 4.8.2021 அன்று சென்னையில் நடைபெற்றது. 

நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியுள்ள போதிலும், ஆளும் பாஜக ஜனநாயக நெறிமுறைகளையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் நிராகரித்து அவை நடவடிக்கைகளை முடக்கி வைத்துள்ளது. நாட்டின் இறை யாண்மைக்கும், சுயசார்புக்கும் பேராபத்தாக எழுந்துள்ள குடிமக் களின் குறிப்பாக எதிர்கட்சிகள், படைப்பாளர்கள், பத்திரிகையா ளர்கள், நீதித்துறை உள்ளிட்ட அறிவுத்துறையினரின் அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக் கேட்டு வரும் பெகாசஸ் செயலி விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் வாங் கியதில் நடந்துள்ள முறைகேடுகள், நாள்தோறும் உயர்ந்து வரும் பெட் ரோல், டீசல் உள்ளிட்ட அத்தி யாவ சியப் பண்டங்கள் விலை உயர்வு, ஒன்பது மாதங்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம், பாது காப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தல், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம், நோய்த் தொற்றுப் பரவல் நெருக் கடி கால ரொக்கப்பண உதவி செய்ய வேண்டியதன் அவசியம் போன்ற மிக முக்கிய பிரச்சினை களை விவாதிக்க அனுமதி மறுக்கும் பாஜக அரசின் அதிகார அத்து மீறலுக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது. இந்தச் சூழலில் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெறவேண் டும் என ஒன்றிய அரசை வலியுறுத் தவும், அஇஅதிமுக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட வேளாண் உற் பத்தி மற்றும் கால்நடை பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்துதல் - எளிமையாக்கு தல்) சட்டம் 2019 ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் வரும் 23.8.2021 முதல் 27.8.2021 (திங்கள் முதல் வெள்ளி வரை) தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள் தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங் களை நடத்துவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் முடிவு செய்துள்ளது.

இத்தகைய மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் பொது ஊரடங்கிற்கு உட்பட்டு, முகக் கவசம் அணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment