4000 ஆண்டுகால பெட்ரோல் வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 28, 2021

4000 ஆண்டுகால பெட்ரோல் வரலாறு

சமையல் எரிவாயு, டீசல், என அனைத்துமே இன்று இந்தியாவில் பேசும் பொருளாகி உள்ளது. இதை வைத்து குறுகிய காலத்தில் மோடி அரசு மக்களிடமிருந்து சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை சுரண்டியுள்ளது.

மிகவும் கொதிநிலையில் உள்ளது இந்த விலை யேற்றம். மக்களைச் சுரண்டும் மோடி அரசின் நடவ டிக்கை குறித்து உறுதியான எதிர்ப்பை யாருமே காட்ட வில்லை. இது மிகவும் வியப்பான ஒன்றாக உள்ளது, இந்து எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை காட்டுகிறது,  என்று என்.டி.டி.வி. இந்தியா எழுதியிருந்தது. இந்தப் பெட்ரோல் டிசல் எரிவாயு விலையேற்றம் குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகளை கொழுக்கவைக்கிறது என்பது அந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை வெளியீடு களில் தெளிவாக தெரிகிறது.

  நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  இன்றைய ஈராக் என்று சொல்லப்படும் பாபிலோனின், யூப்ரடீஸ் நதிக்கரை அருகே, பாபிலோனியர்கள்  கடவுளைச் சந்திக்கவேண்டும் என்ற முட்டாள் தனத்தால் மிகவும் உயரமான கட்டடம் கட்ட திட்டமிட்டனர். அதன் அடித் தளத்தின் ஆழமும் பூமியை நோக்கி நீண்டது. ஆற்றின் கரை என்பதால் நீர் கசியும் என்று எதிர்பார்த்த அவர் களுக்கு இதுவரையில் கண்டிராத ஒரு கறுப்புத் திரவம் ஊறியது,

ஆனால் அதன் மகத்துவத்தை உணராமல்  அந்த கறுப்புத் திரவ கச்சா எண்ணெயைக் கட்டுமானத்திற்கு சிமெண்ட் பசை போலவும், கரையான் அரிக்காமல் தடுக்க, மரத்தூண்களில் தடவியும் பயன்படுத்தி வந்த னர்.  பின்னர், அதனைக் காய்ச்சியும், வற்றவைத்து உருக் கியும் சிறிது சிறிதாக பயன்பாட்டைப் பெருக்கி கப்பல் கட்டுமானம் மற்றும் அதன் ஓட்டைகளை அடைக்கவும் பயன்படுத்தினார்கள் பாபிலோனியர்கள். அவர்களைத் தொடர்ந்து, மெசபடோமியர்கள் நகைகள், அணிகலன் கள் செய்யவும், எகிப்தியர்கள் பிரமீடு கட்டுமானத்திலும், மம்மிக்கள் என்று சொல்லப்படும் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தவும் பயன்படுத்தத் தொடங் கினர்.

நாளடைவில், இதன் எரியும் தன்மையை அறிந்து கொண்ட பாபிலோனிய மக்கள், தங்கள் வீடுகளுக்கும், வீதிகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும் தீப்பந்தத்திற்கு எண்ணெய் ஆக மாற்றினர். இந்த வரலாற்றை, கிரேக்க நாட்டின் பழம்பெரும் வரலாற்று அறிஞர்களான `ஹீரோ டோடஸ்மற்றும் `டியோடோரஸ் சிக்குலஸ்ஆகிய இருவரும் தங்களின் ஆய்வுக்குறிப்பு களில் தெரிவிக் கின்றனர். இப்படித்தான், மண்ணுக்குள் தவழ்ந்துகிடந்த பெட்ரோலின் மூதாதையர்களை, தன் கைகளில் வாரி எடுத்துக்கொண்டான் மனிதன்.

அவர்கள் கண்டுபிடித்தது பெட்ரோலின் மூலப் பொருளான கச்சா எண்ணெயைத் தான். அதாவது கச்சா எண்ணெயின் மாறுபட்ட வடிவமாக திரவ மற்றும் கூழ்ம நிலையில் இருந்தது.  அதன் பின்னர்தான் இந்த கச்சா எண்ணெயை மூலமாக வைத்து, தார் , மண்ணெண்ணெய் - டீசல் இறுதியாக  பெட்ரோல் எனப் பல  பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கினான் மனிதன்.

கி.பி. 347ஆம் ஆண்டு முதன்முதலில் நவீன முறை யில் கச்சா எண்ணெய் எடுக்கும் முறையை அறிமுகப் படுத்தினார்கள் சீனர்கள். அதாவது, மூங்கில் கம்புகளை துளையிட்டு, அதை பூமிக்கடியில் குழாய்களைப்போல பயன்படுத்தி கச்சா எண்ணெயை வெளிக்கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 800 அடி ஆழமுள்ள அந்த எண்ணெய்க்கிணறுதான் பண்டைய காலத்தின் முதல் எண்ணெய்க்கிணறாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். இப்படி எடுக் கப்பட்ட கச்சா என்ணெயை எரித்து ஆவியாக்கி, அதி லிருந்து உப்பு உற்பத்தி செய்தனர். பின்னர், அந்த கச்சா எண்ணெயை வெளிச்சத்திற்கு விளக்கு எண்ணெ யாகவும், எரிப்பதற்கும் பயன்படுத்தத் தொடங்கினர்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் மேற்கு அய்ரோப் பாவிலும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் ரோமானியா விலும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கி.பி. 1745இல் ரஷ்யாவின் உக்தாவிலும், பிரான்சின் அல்சேவிலும் என அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் கச்சா எண் ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. (1889ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் அசாம் மாநிலத்தில் தான் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது).

இப்படியாக, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதி னெட்டாம் நூற்றாண்டு வரை விளக்கு எரிப்பதற்காகவும் இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கச்சா எண்ணெய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் இருந்து புதிய அத்தியாயத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதற்கு காரணம் கச்சா எண்ணெயை பிரித்தும் அதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் நிகழ்த்தியதும் தான்.

1847ஆம் ஆண்டு, ஸ்காட்டிஸ் வேதியியலாளர் ஜேம்ஸ் யங் என்பவர் பிரிட்டிஷ் நாட்டின் ஆல்ஃபி ரெடன்  பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கச்சா எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

1853ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் ஆபிரகாம் பினியோ கெஸ்னர்  என்பவர் நிலக்கரியிலிருந்தும், நிலக்கீலிலிருந்தும்  ஒரு புதிய வகையான எரிபொருளை கண்டுபிடித்தார். அந்த புதிய கண்டுபிடிப்பு தான் நாம் மண்ணெண்ணெய் என்று அழைக்கும் கெரோசின், ஆபிரகாம் கெஸ்னர் தான் கண்டுபிடித்த எரிபொருளுக்கு கெரோசின் எனப் பெயரிட்டார்.

 முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும், கெஸ்னர் கண்டுபிடித்த கெரோசின், குறைந்த செலவில் மிக அதிக அளவிலான வெளிச்சத்தைக் கொடுத்ததால், மக்கள் கெரோசின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்தனர். மண் ணெண்ணெய் உற்பத்திக்காக பல்வேறு இடங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டு, கெரோ சின் தேவையும் உற்பத்தியும் அதிகரித்தது.

1859ஆம் ஆண்டு, எட்வின் டிரேக்  என்பவர், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா  பகுதியில் பூமியைத் தோண்டாமல், கச்சா எண்ணெய் எடுக்கும் நவீன முறையைக் கண்டுபிடித்தார். இவரால் தோண்டப் பட்ட கச்சா எண்ணெய் கிணறுதான், உலகின் முதல் நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக கருதப்படு கிறது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டன.

1876ஆம் ஆண்டு, நிக்கோலஸ் ஓட்டோ சோதனை முயற்சியாக பெட்ரோலில் இயங்கும் இன்ஜினைக்  கண்டுபிடித்தார். அதன் நீட்சியாக, 1879ஆம் ஆண்டு கார்ல் பென்ஸ் என்பவர், பெட்ரோல் இன்ஜினில் இயங்கும் காரை  வெற்றிகரமாக உருவாக்கினார்.

1893ஆம் ஆண்டு, ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஒருவர் கச்சா எண்ணெயிலிருந்து ஒரு புதிய எரிபொரு ளைக் கண்டுபிடித்தார். அந்த எரிபொருளின் கண்டு பிடிப்புக்கு பின்னர் இயந்திரவியல் துறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்னர், நிலக்கரியால் இயங்கும் இயந்திரங்களைக் கொண்டு தான் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கி வந்தன. அதிக அளவு நச்சுப்புகையை வெளியிட்டு, பெரும் பொருட்செலவும், மனித உழைப்பும் கொண்டு இயங்கி வந்த தொழில் நுட்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந் தது அவரின் கண்டுபிடிப்பு.

முதலில், நிலக்கரி கொண்டு இயங்கும் பெரிய இயந் திரத்துக்கு மாற்றாக, சிறிய இயந்திரத்தை கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்துக்கு எரிபொருளாக பயன்படுத்த அவர் கண்டுபிடித்தது தான் டீசல். அதனை கண்டுபிடித் தவரின் பெயர் ருடால்ஃப் டீசல் . தான் கண்டுபிடித்த நவீன இயந்திரத்துக்கு ரூடால்ஃப் எனவும், புதிய எரி பொருளுக்கு டீசல் எனவும் தன் பெயரையே வைத்துக் கொண்டார் ருடால்ஃப் டீசல்.  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை பெட்ரோ லின் எல்லையும் வரலாறும் இன்றளவும் நீண்டுகொண்டே தான் செல்கிறது.

No comments:

Post a Comment