கை மேல் கிடைத்துள்ள ஒற்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

கை மேல் கிடைத்துள்ள ஒற்றன்

 [21-07-2021 நாளிட்ட "இந்து" ஆங்கில நாளிதழின் தலையங்கத்தின்  மொழியாக்கம்]

(தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்பது பற்றிய தகவல் எழுப்பி உள்ள பிரச்சி னைகள் பற்றி அரசின் செயல்பாடு கள் நேர்மையானவை என்பதை அரசு மெய்ப்பிக்க வேண்டும்)

இஸ்ரேலிய அரசின் அனுமதியுடன், தகுதி பெற்றவை என்று அறியப்பட்ட நாடுகளுக்கு தேசிய பாதுகாப்பு அமைப்பு என்ற இஸ்ரேல் நிறுவனம், தாங்கள்  இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ள நபர்களை உளவு பார்ப்பதற்கு தங்களது பெகாசஸ் மென்பொருளைப்  பயன்படுத்த அனுமதித்து உள்ளவர்களின் பட்டியலில் குறைந்தது ஆயிரம் தொலைப்பேசி எண்களுக்கு மேல் உள்ளன. இவற்றில் பரிசீலனை செய்யப்பட்ட 300 வழக்குகளில், 22 தொலைபேசிகள் பன்னாட்டு மன்னிப்புச் சபை மற்றும் அதன் சமகால டோரன்டோ பல்கலைக் கழகத்தின் மக்கள் சோதனைக் கூடங்களால் தடயவியல் பகுத்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 10 தொலைபேசிகள் பெகாசஸின் தாக்குதலுக்கு இலக்கானவை என்பது தெளிவாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது. இதர 2 தொலைப்பேசிகளைப் பொறுத்த அளவில் எந்த ஒரு தீர்மானமான முடிவுக்கும் வர முடியாத நிலையில் அவை உள்ளன.

இந்தியா அல்லது அயல்நாட்டு அரசு ஒன்றி னால், இந்திய குடிமக்கள் மீது வன்முறை மிகுந்த, மிகவும் தீய, நாகரிகமற்ற ஒற்று வேலைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் தெளிவாக இருப்பதுடன், இத்தகைய தகவல்கள் வெளிப்படுத்தும் விஷயங்கள் மிகுந்த நம்பகத் தன்மை கொண்டதாகவும் உள்ளன. இந்திய அரசு வரை வரும் இத்தகவல்கள் அதன் பின் தொடர்ச்சி இன்றி நின்று போகின்றன.

தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதைப் பற்றி தெளிவாக விளக்குவதற்கு மாறாக, சட்டத்திற்குப் புறம்பான ஒற்று வேலைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவில் வாய்ப்பு இல்லை என்ற நம்பத் தகுதியற்ற தனது கூற்றையே இந்திய அரசு திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. தகவல் தொடர்பு செய்திகளை இடை மறிப்பதற்கும், தேசிய மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி டிஜிட்டலில் ஆவணப் படுத்தப்பட்டுள்ள பதிவு களை தெரிந்து கொள்ளவும் சட்டப்படியான விதிகள் உள்ளன.

தாங்கள் உளவு பார்க்க உத்தேசித்துள்ள இலக்குகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உளவு பார்க்கும் ஒரு உண்மையான உளவா ளியைப் போன்ற உளவு பார்க்கும் ஒரு கருவி யாகவே பெகாசஸ் நிறுவனம் அதனை ஆக்கி விடுகிறது. உளவு பார்க்கப்படுபவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது நலனுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத அவர்களின் நெருங்கிய உறவுகள் என்று அனைவர்மீதும், அனைத்து தகவல்கள் மீதும் இந்த உளவு பார்க்கும் செயல் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு உளவு பார்க்கப்படுபவர்களின் பட்டியல், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும், தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் என இந்தப் பட்டியல் நீள்கிறது. பொதுமக்கள் மற்றும் தேச பாதுகாப்பு பற்றிய கவலைகளே இத்தகைய ஒற்று வேலைகள் மேற்கொள்ளப் படுவதற்கான  தேவை  மற்றும் காரணம் என்று எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை.   முன்னாள் இந்திய தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச் சாட்டு எழுப்பிய பெண்ணிடம் உளவு பார்த்து தெரிந்து கொள்வதற்கான தீவிரவாதம் பற்றிய அல்லது சீன ஊடுருவல் பற்றிய தகவல்கள் எதுவும் இருக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்பலாம். சிலரது அடக்கமுடியாத, ஒழுக்கக் கேடான, பெண்களை நிர்வாணமாகப் பார்க்கும்  தீயஆசை ஆகியவற்றைச் சுற்றியே அந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. இந்த அத்து மீறல் தனிப் பட்ட குடிமக்களின் உரிமைகளை மீறுவதுடன், அதற்கும் மேலானதும் ஆகும்.

நிறுவனங்களைத் தங்களின் எண்ணத்தை ஏற்றக் கொள்ளச் செய்யும் அளவில் சமரசப் படுத்துவதற்கும், தேர்தல்களில் திருட்டுத் தனமாக வெற்றி பெறுவதற்கும்,  எதிர் கட்சி களின் பிரச்சாரத்தை சீரழிப்பதற்கும், ஒரு தேர்ந்தெடுக் கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கும் கூட சட் டத்திற்குப் புறம்பாக இவ்வாறு பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பீமா கொரகான் வழக்கில் குற்றம் சாட்டியவரின் கணினிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் சாட்சியங்கள் இடைச்செருகல் செய்யப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்களுக்கு ஆதரவாக முன்பு இருந்த சாட்சியங்களே குற்றம் சாட்டப்பட்டவருக்கு இப்போது ஆதாரங்களாக விளங்குவதை இதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

இவ்வாறு குடிமக்களின் வாழ்க்கையை  அரசு அமைப்புகள் மிதித்து சிதைக்கும் இது போன்ற நேரங்களில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தங்களுக்கு இதனைப் பற்றி எதுவுமே தெரியாது என்று சாதிப்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஏற்றம் தருவது அல்ல. இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விஷயங்களில் உள்ள உண்மையைப் பற்றி,  ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுவினாலோ அல்லது உச்ச நீதிமன்றத் தினாலோ அல்லது வேறு தகுதியுள்ள ஒரு அமைப்பாலோ,  ஒரு விசாரணை நடத்தி உண்மை தோண்டி வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு முன் செய்யப்பட வேண்டிய வேலைகளின் முதல் படியாக, பெகாசஸ் எந்த ஓர்  இந்திய  அமைப்பாவது வாங்கியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அரசு சுற்றி  சுற்றி வருவதை நிறுத்திக் கொண்டு உண்மை நிலையைத் தெளிவாக்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.

நன்றி: 'தி இந்து' 21-07-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment