நூற்றாண்டு காணும் என். சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 15, 2021

நூற்றாண்டு காணும் என். சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  என்.சங்கரய்யா அவர்களின் 100-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை குரோம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது  உயர்கல்வித் துறை அமைச்சர்  . பொன்முடி,   ஊரக தொழிற் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு,  தயாநிதி மாறன்,  . ராசா,  வைகோ மற்றும்   தமிழச்சி தங்கப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment