சென்னை அய்.அய்.டியில் ஜாதி, மத வேறுபாடுகள் ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

சென்னை அய்.அய்.டியில் ஜாதி, மத வேறுபாடுகள் ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன?

மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

புதுடில்லி, ஜூலை 21 சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரி யர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் ஜாதி, மத வேறுபாடுகளால் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படு வதைத் தடுக்க, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என் னென்ன என்று ஒன்றிய கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதானிடம் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (அய்அய்டி) சென்னை விடுதியில் 2019ஆம் ஆண்டில் பாத்திமாவின் தற்கொலையைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் ஜாதி, மத வேறுபாடு களால் உயர்கல்வியின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப் பதைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையின ருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பதவி விலகி வருவதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்று விரிவான கேள்வியை டி.ஆர்.பாலு எழுப்பினார்.

இதற்கு ஒன்றியக் கல்வி அமைச்சர், தர்மேந்திர பிர தான் பதில் அளித்தார். இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் ஜாதி, மத வேறுபாடுகளைக் களைய அதுசார்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மன நிலையைச் சீர்செய்யத் தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம், 1961இன்படி பேராசிரி யர்கள் மற்றும் மாணவர்களிடையே எந்த ஜாதி, மத வேறு பாடுகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு தவிர ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லையாம் ஒன்றிய அரசு தகவல்

சென்னை, ஜூலை 21- இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், மகாராட் டிட்ரா, ஒடிசா மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோரி வந்தன. ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சராக இருந்துவரும் ராம்தாஸ் அத்வா லேவும், நாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான தேவையுள்ளதாக அண்மையில் கூறியிருந்தார்.

இதனால் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு மக்களைத் தவிர வேறு எந்த பிரிவினரையும் ஜாதிரீதியாக கணக்கெடுக்கப் போவதில்லை என ஒன்றிய அரசு கொள்கை முடி வெடுத்துள்ளதாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “மகாராட்டிரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி ரீதியில் விவரங்களைச் சேகரிக்குமாறு கோரியுள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவு மக்களைத் தவிர, வேறு பிரிவு மக்களைச் ஜாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று இந்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதுஎனக் கூறியுள்ளார்.

பெகாசஸ் உளவு விவகாரம்வரும் 22ஆம் தேதி பேரணி

கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, ஜூலை 21 பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ள தாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:-

ஒன்றிய அமைச்சர்கள், மேனாள், இந்நாள் இந்திய பாதுகாப்புப் படை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கைப்பேசிகள் ஹேக் செய்யப்பட்ட சட்ட விரோதச் செயல், பாஜக அரசு மீதான சந்தேகத்தையும், மோசமான நடவடிக் கையையும் வெளிப்படுத்தியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களின் கைப்பேசிகளும் ஹேக் செய் யப்பட்டு வேவு பார்க்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது பெகாஸஸ் ஸ்பைவேர் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.. நிறுவனத்தின் இந்த மென்பொருள், பல நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய் யப்பட்டுள்ளன.

இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர் கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கைப்பேசிகளை ஹேக் செய்து வேவு பார்க்க மத்திய அரசும், அதன் ஏஜென்ஸிகளும் ஸ்பைவேரை வாங்கியது தெளி வாகத் தெரிகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷா விலகக் கோரியும், நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஜூலை 22ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வரை நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment