டில்லியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களைக் கொண்டு புதிதாக ‘சமூக புரட்சிக்கான அணி’ உருவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

டில்லியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களைக் கொண்டு புதிதாக ‘சமூக புரட்சிக்கான அணி’ உருவாக்கம்

புதுடில்லி, ஜூலை 27- புதுடில்லியில் அசோகா சாலையில் அமைந்துள்ள ஆந்திர பிரதேச பவனில்  25.7.2021 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தாழ்த் தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோர், மதச் சிறுபான்மை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், அரசமைப்புச்சட்ட நோக்கத்தின்படி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான சமூகநீதியை உறுதிப் படுத்துவதன்மூலம் நாட்டின் வளர்ச்சி, முன் னேற்றம் காண்பதற்குரிய வழியில் முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது என்றும், நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்கள் சந்தித்து வரும் பிரச் சினைகளுக்கான காரணிகளை எதிர்த்துப் போராடுவது என்றும், அதற்குரிய போராட் டங்களை நடத்துவதற்கான நாள் மற்றும் இடத்தை அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் மேனாள் தலைவர் நீதிபதி ஈசுவரய்யா தலைமையில் அவதேஷ் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, அகில இந்திய மருத்துவக்கல்வி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு, பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு தனி அமைச்சகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட் டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் பி.கே.அரிபிரசாத், டாக்டர் பாதன், ராஷ்டிரிய ஓபிசி மகா சங்கத்தின் தலைவர் பி.தவ்டே, டில்லி பல்கலைக்கழகம் ஷியாம் லால், கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்தீப் உள்ளிட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினைகள்குறித்து உரையாற்றினர்.

உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் டாக்டர் அம்ரி தான்ஷூ, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் சங்கத்தின் டில்லி கிளையின் பொறுப் பாளர்கள் ஷியாம் சுந்தர், ஷிவால்பிரசாத் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment