அரசு மருத்துவமனைகளில் நிமோனியா காய்ச்சலை தடுக்க குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

அரசு மருத்துவமனைகளில் நிமோனியா காய்ச்சலை தடுக்க குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

சென்னை, ஜூலை 23 நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசிஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் (23.7.2021) இலவசமாகப் போடப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில், பிசிஜி - காசநேய், ஹெபடைடிஸ் பி - கல்லீரல் மற்றும் புற்றுநேய், ஓபிவி  இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தெற்று, கல்லீரல் தெற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தை களுக்கு பேடப்படுகின்றன. அதேபேல், ரேட்டா - வயிற்றுப்பேக்கு, எம்.ஆர்.  தட்டம்மை மற்றும்ரூபெல்லா நேய், ஜப்பானியமூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகளும் போடப்படு கின்றன.ஆனால் நிமேனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமேகாக்கல் தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப் படாமல் இருந்தது.

அனைத்து குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்பதால், தேசிய தடுப்பூசி அட்டவணையில் இது இணைக்கப்படாமல் இருந் தது. ஆனால் தனியார் மருத்துவ மனை களில் இந்த ஊசி ஒரு தவணைக்கு ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப் படுகிறது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில், நியூ மேகாக்கல் தடுப்பூசியும் இணைக் கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆண்டுதேறும், 9.35 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இதற்கான,திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சமீபத்தில் தொடங்கி வைத்தார். பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும்ஒன்பது மாதங்கள் என 3 தவணையாக தடுப்பூசி போடப்படும்.

அதன்படி, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் மருத் துவமனைகளில் நியூமேகாக்கல் தடுப்பூசி இன்று முதல், குழந்தை களுக்கு இலவசமாகப் போடப் படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment