அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலை விட பெகாசஸ் விவகாரம் மிகவும் மோசமானது: மம்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலை விட பெகாசஸ் விவகாரம் மிகவும் மோசமானது: மம்தா

புதுடில்லி, ஜூலை 23 வாட்டர் கேட் ஊழலை விட பெகாசஸ் விவகாரம் மிகவும் மோசமானது என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கடுமையாக சாடியுள்ளார்.

பெகாசஸ் விவகாரம்

இஸ்ரேலின் என்.எஸ்.. நிறு வனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பத்திரிகை யாளர்கள் உள்பட 300 பேரின் கைப்பேசிகளை உளவு பார்க்க இலக்காக வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இது தொடர்பாக ஒன்றிய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரு கின்றன.

மம்தா  குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் தலை வரும், மேற்கு வங்காள முதலமைச் சருமான மம்தா  பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக அவர் கடுமையாக சாடியுள்ளார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சியை திணிக்க ஒன்றிய அரசு நூற் றுக்கணக்கான இந்தியர்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, பெகாசஸ் விவகாரம், அமெரிக்காவின் வாட் டர்கேட் ஊழலை விட மிகவும் மோசமானது. இது சூப்பர் எமர் ஜென்சி. அவர்கள் (பா.ஜனதா தலைமை) தங்கள் சொந்த அதி காரிகள் மற்றும் அமைச்சர்களை கூட நம்பவில்லை என்று தெரிவித்தார்.ஏராளமான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் கைப்பேசி உரையாடல்களை கூட பா.ஜனதா தலைமை பதிவு செய்திருப்பதாக கேள்விப்பட்டதாகவும் மம்தா கூறினார்.

No comments:

Post a Comment