கரோனா பரவலால் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

கரோனா பரவலால் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு

 அறிவியல் இயக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சென்னை,ஜூலை 24- கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட் டுள்ளன. அதன் காரணமாக குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் 10 விழுக்காடுஅதிகரித்துள்ளது. 51 விழுக்காடு மாணவர்களுக்கு இணையகல்வி (ஆன்லைன்) வசதி இல்லை. 38 விழுக்காடு குழந்தை களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு டனும், கற்றல் திறன் குறைந்தும் காணப்படுகின்றனர் உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.  கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் இடைநிற்றல் உயர்ந்துள்ளதுடன் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் கரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் (22.7.2021) வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக, சுமார் 17 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத சூழல் என்ற போதும், இது பள்ளிக் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து மாநிலம் முழு வதும் 35 மாவட்டங்களில் 2,137 மாணவர்கள், பெற்றோரிடம் பல் வேறு கோணங்களில் ஆய்வு நடத் தப்பட்டது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், மாணவர் களின் இடைநிற்றல் சற்று அதி கரித்திருப்பது தெரியவந்துள்ளது. கரோனாவால் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பலரது குடும் பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன. இதனால், மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டா லும்கூட, சில குழந்தைகள் வேலையைவிட்டு உடனே பள்ளிக்கு வருவதற்கான சாத்தியங்கள் குறை வாகவே உள்ளன. அதேபோல, கிராமப்புற மாணவர்களை இணையவழிக் கல்வி முழுமையாக சென்றடையவில்லை. கல்வித் தொலைக்காட்சியை சுமார் 41 சதவீதம்பேர் மட்டுமே பார்க்கின் றனர். அதுவும்முழுமையான கற்பித் தலை தரவில்லை. தவிர, குழந்தை களிடம் கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மெல்ல கற்கும் குழந்தைகளிடம், மீண்டும் பள்ளிக்கு செல்ல தயக்கம் நிலவு கிறது. அதே நேரம், கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டைவிட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின்கவனத்துக்கு சில பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லா மல் பள்ளிக்கு திரும்பிவிட்டனரா என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிகள் திறந்ததும் நேரடியாக பாடங்களை நடத்தாமல்பிரிட்ஜ் கோர்ஸ்கற்றுத் தந்து, அதன்பிறகு பாடங்களை சொல்லித் தரலாம். பாடத் திட்டத்தை குறைப்பதுடன், உள்ளூர் சூழலைப் பொறுத்து பள்ளிகளை திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவர் என்.மணி, கல்வியாளர் என்.மாதவன், கள ஆய்வு ஒருங் கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ் ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment