இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மோடி அரசுக்கு கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மோடி அரசுக்கு கண்டனம்!

புதுடில்லி, ஜூலை 27- "சுதந்திரமாக செய்திகள் வெளியிடும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்கு, ஒன்றிய பா... அர சானது, வருமான வரித்துறை, சி.பி.அய்., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது" என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா 2ஆவது அலையில் நிகழ்ந்த மனிதப் பேரழிவு தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த, ‘தைனிக் பாஸ்கர்நாளிதழ் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தபாரத் சமாச்சார்ஆகிய செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள்மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள பின்னணியில், இந்திய பத்திரிகை ஆசிரியர்கள்  சங்கம் இவ்வாறு கூறியுள் ளது.

"கரோனா இரண்டாவது அலையின் போது, ஒன்றிய அரசு திறம்படச் செயல்படாத தால் ஏற்பட்ட உயிரிழப்பு கள் மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து, ‘தைனிக் பாஸ்கர்நாளிதழ் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டது.

அதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள் ளன. இந்த தகவலை ந் நி று த் தி ன் ஆசிரியர் ஓம்கவுர் அண் மையில் வெளிப்படை யாக கூறியிருந்தார். கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்த சம்பவம் குறித்து, ‘நியூயார்க் டைம்ஸ்நாளிதழில் கட்டுரை ஒன்றையும் அவர் எழுதினார்.

இதேபோலபாரத் சமாச்சார் டிவிசெய்தி நிறுவன மும், கரோனா விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமை யாக விமர்சித்து செய்தி வெளியிட்டது. இந்நிலையில், சுதந்திர மாக செயல்படும் ஊடகங்களை ஒடுக்குவதற்காக, அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது" என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கூறி யுள்ளது.

No comments:

Post a Comment