சுயமரியாதை சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் சத்துவாச்சாரி ச.கி. செல்வநாதன் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

சுயமரியாதை சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் சத்துவாச்சாரி ச.கி. செல்வநாதன் படத்திறப்பு

சத்துவாச்சாரி, ஜூலை 28 சத்துவாச்சாரி சுயமரி யாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் .கி.செல்வநாதன் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு அவரது இல்லத்தில் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது

மாநில மகளிரணி அமைப்பாளர் .தேன்மொழி நிகழ்வுக்கு தலைமையேற்று அவரின் இயக்கப் பணிகள் பற்றி சிறப்பானதொரு உரையாற்றினார்.

பெரியார் மருத்துவரணி செயலாளர் மருத்துவர் பழ. ஜெகன்பாபு, வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மண்டல மகளிரணி செயலாளர் .ஈஸ்வரி, மாவட்ட தலைவர் வி. . சிவக்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் .கலைமணி, செல்வநாதன் அவர்களின் பெயரன் கிருட்டிணகிரி அரசு இசைக்கல்லூரியில் மிருதங்க ஆசிரியர் கருணா. நாகராஜன், தி.மு. முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பி. இராமலிங்கம், .தி.மு. முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர், வி.வெங்கடேசன் (தி.மு.) ஆகியோர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் .கி. செல்வநாதன் அவர்கள் 72 ஆண்டுகளில் கழகப் பணியில் கலந்துகொண்ட போராட்டங்கள், சிறை சென்ற வரலாறு ஆகியவற்றை சிறப்பாக எடுத்துரைத்தனர். அவரது பெயர்த்திகள் .சசி, .ரேகா ஆகியோர் தாத்தாவின் நினைவேந்தல் கவிதை வாசித்து நன்றியுரை ஆற்றினர். இரண்டு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

நிகழ்வில் அவரது மகன் செ. இளம்பரிதி, மகள்கள், பெயர்த்திகள், உறவினர்கள், கழகக் காப்பாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் .சிகாமணி, பொதுக்குழு உறுப்பினர் தா. நாகம்மாள், வேலூர் மாநகர தலைவர் .விஸ்வநாதன், மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் .மொ.வீரமணி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் . துரைசாமி, குடியாத்தம் நகர செயலாளர் வி. மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன், வேலூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் வி.சி.தமிழ்நேசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வீ.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ..சந்தீப், வேலூர் ஒன்றிய தி.மு. செயலாளர் சி.எல்.ஞானசேகரன், பகுதி செயலாளர் டி.சக்கரவர்த்தி, 24 ஆவது வட்ட உறுப்பினர் மற்றும் பகுதி மக்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பாக்கினர். அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment