மதுரை காமராஜ் பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டண உத்தரவு ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 25, 2021

மதுரை காமராஜ் பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டண உத்தரவு ரத்து

 மதுரை, ஜூலை 25  மதுரை காமராஜ் பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இணைவிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் எனப் பல்கலைக்கழகப் பதி வாளர் 2016-இல் பிறப் பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் கல் லூரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கற்பிக்கப்படும் சுயநிதி பட்டப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டண மாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. அதன் படி இணைவிப்புக் கட் டண பாக்கியை 31.7.2016-க்குள் செலுத்த பல்கலைக் கழகப் பதிவாளர் 2016 ஜூலை 1-இல் உத்தரவிட் டுள்ளார். இணைவிப்புக் கட்டணம் பல்கலைக் கழகச் சட்டப்படி நிர்ண யம் செய்யப்படவில்லை.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை. எனவே, இணைவிப்புக் கட்டணத்தைச் செலுத் துமாறு பதிவாளர் பிறப் பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசா ரித்த நீதிபதி வி.பார்த்தி பன், பல்கலைக்கழகம் சார்பில், இணைவிப்புக் கட்டணம் 2006-இல் முடிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. தமிழ கத்தில் பிற பல்கலைக் கழகங்களை ஒப்பிடுகை யில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இணைவிப்புக் கட்டணம் குறைவாக உள்ளது. இணைவிப்புக் கட்டணம் நிர்ணயம் செய்வதில் பல் கலைக்கழக வேந்தரிடம் ஒப்புதல் பெறுவது கட் டாயம் அல்ல என்றார்.

இணைவிப்புக் கட்டண நிர்ணயம் செய் ததை மறுபரிசீலனை செய்யுமாறு கல்லூரிகள் சார்பில் பல முறை கோரிக்கை முன்வைக்கப் பட் டுள்ளது. அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப் படவில்லை. இணைவிப் புக் கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டதற்கு பல்கலைக்கழக வேந்த ரிடம் அனுமதி பெற வில்லை. எனவே, ஒவ் வொரு பட்டப் படிப் புக்கும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இணைவிப்புக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மதுரை காமராஜ் பல்கலைக் கழகப் பதிவாளரிடம் உத் தரவு ரத்து செய்யப் படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment