மூடப்பட்டிருந்த அரசு நூலகங்கள் மீண்டும் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 26, 2021

மூடப்பட்டிருந்த அரசு நூலகங்கள் மீண்டும் திறப்பு

சென்னை, ஜூலை 26- தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் 24.7.2021 முதல் திறக்கப்பட்டன

தமிழ்நாட்டில் கரோனா பரவலால் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த அரசு பெது நூலகங்கள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரத்தால் கடந்தமே மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அரசு நூலகங்கள் மே 10ஆம் தேதி முதல் மூடப்பட்டன. தற்போது நோய் பரவல்படிப்படியாக குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில், வாசகர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு நூலகங்கள் செயல்பட பொது நூலகத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக் கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே நூலகத் துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாசகர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரது உடல் வெப்பமும் பரி சோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி பயன்பாடு, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நடைமுறைகளும் பின்பற்றப் பட்டன.

No comments:

Post a Comment