அதானி நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி விசாரணை: பங்குகள் கடும் வீழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

அதானி நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி விசாரணை: பங்குகள் கடும் வீழ்ச்சி

மும்பை, ஜூலை 21- பிரபல தொழில் அதிபரான கவு தம் அதானி நிறுவனங் களில் செபி மற்றும் வரு வாய் புலனாய்வு ஆய்வு இயக்குநரகம் திடீர் ஆய்வு நடத்துவதின் விளை வாக அவரது நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

கவுதம் அதானியின் 6க்கும் மேற்பட்ட நிறுவ னங்களில் பங்கு ஒழுங்கு முறை விதிகள் மீறல்கள் என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரது நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன், அதானி துறைமுகம் மற் றும் அதானி எரிசக்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த் தனை வாரியம் என்று அழைக்கப்படும் செபி மற்றும் வருவாய் புல னாய்வு இயக்குநரகம் மேற்கொண்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இந்த தகவல் களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான 19.7.2021 அன்று ஒன்றிய நீதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் கவுத்ரி தெரிவித்தார். அதானி யின் வெளிநாட்டு முத லீடுகள் உள்ள இந்த நிறு வனங்களில் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்ய வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஒன்றிய அரசின் இந்த தகவலால் மும்பை பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் 5% வீழ்ச்சி அடைந்துள்ளன.

19.7.2021 அன்று மும்பை பங்குச் சந்தை 587 புள்ளிகள் இழப்புடன் நிறைவடைந்தது. இத னால் அதானி உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 1.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் அதானியின் பங்கு கள் கடும் வீழ்ச்சி அடைந் தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment